பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அருணகிரிநாதர் சபையோர்க்குக் காட்சி தந்து 1 மறைந்தார். அரசன் முதலிய யாவரும் இது அற்புதம், அற்புதம் என வியந்து அருணகிரியாரை முருக பிரான் ஆட்கொண்டது சத்தியம், சத்தியம் எனத் துதித்துக் கூத்தாடினர். சம்பந்தாண்டான் நானமும், பொருமையும் தலை கொள்ளச் சபையினின்றும் மறைந்தோடினன். இங்ங்ணம் சபையில் முருக பிரான வர வேண்டிப் பாட முருக வேளும் வேண்டின வாறே ஒரு நொடிப் பொழுதிற் சபையில் தோன்றித் தரிசனம் தந்து அருணகிரியாரைத் தாம் ஆட்கொண்டதை உலகறியப் புலப் படுத்தினர் என்பது."

  • சயிலம் எறிந்தகை வேற் கொடு, மயிலினில் வந்தெனை

யாட்கொளல், சகமறியும்படி காட்டிய குருநாதா' * -திருப். 331 எனவரும் திரிசிராப்பள்ளிப் பதிகத்தாலும், ' உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒரு நொடி2 தனில் வருமயில் விரா ’ -திருப். 755 என்னும் விருத்தாசலத்துப் பதிகத்தாலும் தெளிவுற அறியக் கிடக்கின்றது. இந்த நிகழ்ச்சியைத் திருச் செங்கோட்டுப் பதிகம் ஒன்றில் அருனையில் ஒரு விசை பரவ வருமதில் (வந்தது போல)” -திருப். 387-என்னும் அடியிற் குறிப் பித்துள்ளார். - 8. தல யாத்திரையும், தல யாத்திரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும், அவ்வத் தலத்துத் திருப்புகழ்ப் பாக்களிற் சிற்சில குறிப்பும் 1. திருவண்ணுமலை-(509 - 586) இங்ங்னம் பெரும் புகழ் பெற்ற அருணகிரி நாதர் தாம் அருள் பெற்ற தலமாகிய அருணையிற் பல அற்புத H 1. வெற்றிப் ப்ரபுடதே வக்குரிசில் பேணி யெதிர்கான, முருகன் மயில்மேல் முடுகி வரவழைத்து வந்தது காண்” -தணிகையுலா 2. ஒரு நொடி என்ற தல்ை முருகன் வருவதற்குத் தடை ப்ட்டு நேரமாயிற்று என்ப்படும் கர்ண பரம்பரைச் சேதி தவரும் என்க.