பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24. அருணகிரிநாதர் போது கிடைக்கும் என்பது மிக அழகாக எடுத்து விளக்கப் பட்டுள்ளது. (திருப்புகழ் ஆராய்ச்சி தலைப்பு 50-பார்க்க) 517. கமரி மலர் -இச் செய்யுளில் தாள ஒலி, குமர குருபர குமர குருபர என ஒலித்தலைக் குறிக்கின்ருர். 523. :வடவை'-இப்பாடலிற் சிவபிரானுக்கு உபதேசித் தது மவுன மறை” எனப்பட்டுள்ளது. 526. 'அமுதஇது தேவி துதி நிரம்பிய பாடல். 534. 'அருக்கார்’-இப் பாட்டில் வள்ளியம்மையைத் திருடின முருகர் தேவியைத் தமது தோளில் வைத்து ஒளித் தோடினதாகக் கூறப்பட்டுள் ளது. 545. இருளளக - இந்தப் பாட்டில் சுந்தர மூர்த்தியை ஆட்கொண்ட திருவிளையாடல் கூறப்பட்டுள் ள்து. 548, 581. கடல்பரவு', 'மொழிய-இப் பாடல் களிற் சூரனுக்கு அரணுயிருந்த எழுகிரிகளை வேலாயுதம் அட்டது கூறப்பட்டுளது. 550. கமல' -கண்வர்ணனை கூறும் கடலைச் சிறைவைத்து (126) என்னும் பாடலின் வகையில் ஸ்தன வர்ணனை கூறும் பாடல் இது. இப்பாட லின் ஈற்றடிகளுக்கு :

மமதை யொத்துக் கொக்கரித்துப் படுகள அசுர ரித்தத்திற் குளித்துச் சசி பதி: மகள் கரத்தைப் ப்ற்றுகொற்றக் கொடை முருகவிராலி மலையினுச்சிப் பச்ச்ை ரத்னக் கலவியி னுலவு மெய்ப் ப்ரத்யசூஷ ரதைஷத் குருபர வயலியிற் சித்தித் தெனக்குத் தெளிவருள்

பெருமாளே” என்றும் பாட பேதம் உண்டு. 55.1. கரிமுக-இதில் மணிவாசகப் பெருமான் சரி தம் : கூறப்பட்டுள்ளது. 557. குரவ’-இப் பாட்டிற் "குற மக2ள வேளைக் காத்து அணை பெருமாளே -என்ருர். வேளைக்காத்து - காத்திருந்து, சமயம் பார்த்து எனப் பொருள் படும்.-இப் பொருளில் தான் வேளைக்காரன் வகுப்பில் வரும் வேளைக்காரனே-என்பதற்குப் பொருள் கான வேண்டும். 573. பாண மலர் 7-அடி : கான அரிவை முனிற்குங் கதிர் வேலா - என்றும் பாடம்.