பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. அருணகிரிநாதர் சிவபக்தருக்கு இவ்வமுதைப் பகிர்வேன் எனப் பகிர்ந்து கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ள விஷயம் அறிந்து மகிழத் தக்கதாம். பின்பு (18) கடம்பூருக்கு (761) வந்து பணிந்து, அங்கிருந்து (19) ஆச்சாபுர நல்லூரை (7.66) அடைந்து “ சங்கர தியாகர் வந்துறை நல்லூர் ” என விளக்கிப், பின்பு (20) மயேந்திரப் பள்ளியை (767) அடைந்து போற்றி, அத்தலத்துப் பதிகத்தில் வள்ளியம் மையை என் றன் உளம்புகு பாங்கிமான்' எனப் புகழ்ந்தனர். அங்கி ருந்து நீ சம்பந்தப் பெருமானது அவதார ஸ்தலமான (21) சீகாழியைச்’ (168-781) சேர்ந்தார். 3. சீகாழி முதல் திருவாரூர் வரை (19 தலங்கள்: 21-39) தமது வழிபடு கடவுளாகிய பூநீ சம்பந்தப் பெருமானது தலமாயிற்றே என மகிழ்ந்து சீகாழியிற் சில நாள் சுவாமிகள் தங்கினர். சீகாழிக்கு உரிய பன்னிரு நாமங்களில்-காழி, புகலி, சண்பை, பிரமபுரம், கொச்சை, கழுமலம், பூந்தராய் என்பன இவர் பாடிய பாசுரங்களில் வந்துள்ளன. ஞான அசம்பந்தப் பெருமானது பெருமையை மனமார வாயாரத் திருமது பதிகங்களில் எடுத்து ஒதினர். சீகாழிக்கு உள்ள 14 யுள்திகங்களில் ஏழு பதிகங்களில் சம்பந்தப் பெருமானது லீலை யாள் பாராட்டப்பட்டுள்ளன. பூநீ சம்பந்தப் பெருமான் பண் 'ைபிலாத எண்ணுயிரம் சமணரைக் கழுவேற்றியதும் (770, 771, 773,778), சமணர் கலங்கத் தமிழ்-(தேவாரம்) கூறிய தும் (775), பாண்டியனுடைய சுரப் பிணியைத் தீர்த்ததும் (770, 772), பாண்டி நாட்டில் திருநீறு பரவச் செய்ததும் (778), சம்பந்தர் கவுணிய கோத்திரத்தினர் என்பதும் (768, 778), முத்தமிழாகரன் என விருது ஊதப் பெற்றவ ரென்பதும் (771), பால பருவத்தினர் என்பதும் (778), அவர் ஞானத் தமிழ்ப் பாடல்களை-வேதக் கவிகளைப்பாடினு ரென்பதும் (770, 778) விளக்கப்பட்டுள, திரு நிற்றின் சிறப்பும் (769), ஹர ஒலியின் பெருமையும் (769), நரகில் வீழ்வோர் இவரிவர் என்பதும் (769), பிரமபுரம்: என்பவர் மனதிலும் குகன்’ என்பவர் மனதிலும் முருகன்