பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36." அருணகிரிநாதர் மிசைத் தோன்றித் 'திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள மேலை வயலூர் என வழங்கும். செய்ப்பதி யில் உள் ளேம். நமது திருப்புகழை நித்தம் பாடும் அன்பை உனக்கு அவ் வயலூரிற் ப்ரசாதிப்போம். நீ அங்கு வந்து சேருக'-எனக் கட்டளையிட்டு மறைந்தார் போலும். அருன் கிரியார் விழித்தெழுந்து கனவிலாள் சுவாமி நின் மயில் வாழ்வும், கருணை வாரி கூர் ஏக முகமும், வீரம் மாருத கழ லும் நீப வேல் வாகும் மறவேனே, மேலை வயலி மீது வாழ்தேவர் பெருமாளே (916) எனப் போற்றி, பெரு மானே ! நீ அடியேற்குப் புலப்பட உரைத்த வயலூர்ப் பதியை என்று காண்பேன்! உன் திருப்புகழை நித்தம் பாடும் பாக்கியத்தை என்று பெறுவேன் 1’ என உள்ளம் உருகி, ‘புயற் பொழில் வயற்பதி நலப்படு ப்ரியத்தொடு புலப்பட எனக்கருள் பெருமாளே (271-பாடபேதம்) என் றும், 'செய்ப்பதித் தலத்தினைத் துதித் துனைத் திருப்புகழ்ப் பகர்வேனே, திருப்படிக்கரைப் பெருமாளே'-(791)-என் றும் போற்றி வணங்கி வயலூரைத் தரிசிக்கும் ஆசை உந் தப் புறப்பட்டு (24) வைத்திசுரன் கோயிலை (783-788) அடைந்தார். வைத்திய நாதப் பெருமாளே என முருகவேளையே துதித்து (783), தையல் நாயகித் தாயும் அவ்வம்மை பாக ராம் நாதரும் பிரியப்பட முத்தந் தந்தருள் பெருமாளே என்று 'முத்துக் குமாரர்' எனப் பெயர் வந்ததின் கார னத்தை விளக்கி (785), அத்தலத்துச் சிவபிரான் திரா நோய் தீர்த்தருள வல்லான்', என்பதை வினை தீர்த்த சங்க ரர்' என்னுந் திருநாமத்தால் விளக்கி (787), சம்பாதி, சடாயு, எனப் பெயரிய பறவைகள் (புட்கள்) பூசித்த தலம் புள்ளி ருக்கு வேளுர் (788) என்பதையும் புலப் படுத்தியுள்ளார்.பின்பு அங்கிருந்து (24A)1 திருக்குறுக்கையையும், (24B)2 1. குறுக்கை-திருப்புகழ் வைப்புத் தலம். திருப்.28, 439. 2. தமனியப்பதி (திருப்.706) பொன்னூர் எனக் கொண் டால் இத்தலத்தைத் தரிசித்தார் எனக் கொள்ள லாம்; தம்னியம்=பொன்.