பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 அருணகிரிநாதர் பிருந்த தென்று ஞாபகம் வரத் தமது பாடலையும் தேவியின் திருமுலை வர்ணனையாகப் பச்சை யொண்கிரி போலிரு மாதனம்’ (812) எனத் துவக்கினர். இப்பதிகத்தில் 'சித்தர் விஞ்சையர் மாகர் சபாஷென' என்னும் அடியில் சபாஷ்' என்னும் பதம் வந்திருப்பது கவனிக்கற் பாலது; இதல்ை இவர் காலம் மகம்மதிய ராஜ்ய காலம் வந்த பிறகு என்பது ஏற்படும். திருநள்ளாற்றை விட்டுக் (36) கன்ன புரம் (815) தரிசித்து வள்ளியைப் பின்னிரவிற் கன்னமிட்ட லீலையைப் பாடிப், பின்பு (36A) திரு மருகலைத்1 தரிசித்து, (37) 'திருச் செங்காட்டங் குடிக்கு (817) வந்து சிறுத் தொண்ட நாயனர் பிள்ளைக் கறியமுதளித்த பெருந் தொண்டைச் சிறப்பித்துத், (38) திருவிற்குடி (818) சேர்ந்து குழியுற்ற அத்தி போல மங்குவேனே என ஆண்டவனிடம் விண்ணப்பஞ் செய்து, (39) விஜய புரத்'துக்கு (819) வந்து வணங்கித் (40) திரு வாரூர் சேர்ந்தனர். 4. திருவாரூர் முதல் வேதாரணியம் வரை (5 தலங்கள் 40-44) திருவாரூரிற் (820-826) சில நாள் தங்கி மது நீதி சோழன் அத்தலத்தில் தனது மகன் மீது தேரை ஊர்ந்த நீதியைச் சிறப்பித்துப் (825) பாடிச், (41) சிக்கல் (830–831) என்னும் கூேடித்திரத்தை அடைந்து சிக்கற் சிங்கார வேலவ: உலகோரைப் பாடிப் புகழும் புத்தியை விட்டு உனது பாத தாமரையே உற்ற பற்றெனச் சிக்கெனப் பிடித்துள்ளேன். நீ கடைக்கண் பார்த்துப் பேரின்ப வாழ்வை யருளுதல் வேண்டும் (831) எனப் பிரார்த்தித்து, (42) நாகபட்டி னம் (832.834) வந்தார். அது கடற்கரையூர் ஆதலின் கட லின் ஒலி ஒலம் 1 முருகா' என ஒலிடுவது போலத் தமது காதில் முழங்க அவ்வொலியையே முதலாகக் கொண்ட 'ஒல மிட்டிரைத் தெழுந்த வேலை' என வரும் பதிகத்தைப் (832) பாடிப், பெண்கள் மயக்கு என்னைத் தாக்கினும் உன் கழலை மறவேன் (833) எனத் திடம்பட உரைத்து, "உன் திரு - 1. திருமருகல்-திருப்புகழ் வைப்புத்தலம்-திருப். 165.