பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*T என் ஆத்ம நண்பரும் திருவல்லிக்கேணியில் திருப்புகழ்ச் சபை ஒன்றை நிறுவி முப்பது வருஷகாலமாக இடையூ றின்றி ஞாயிற்றுக்கிழமைதோறும் தவருது திருப்புகழ்ப் பஜனை நடத்தி வருபவருமான 'திடவிய நெஞ்சுடை அடி யர்' பிரமயூரீ வெங்கடராவ் அவர்களின் மூத்த குமாரரும், தந்தையைப் போலவே பத்தித் துறையில் இழிந்துள்ள பரம பக்தருமாகிய பிரமழநீ வேங்கட சுப்பிரமணிய ஐயர வர்கள். இந்த அன்பரின் மூலமாக மற்றுமோரன்பர்கவர்ன்மெண்ட் செக்ரடேரியட்டில் அசிஸ்டன்ட் செக்ரடரி உத்தியோகம் வகிக்கும் திருவாளர் ராவ் சாஹிப் நல்லூர்முருகேச முதலியாரவர்கள் B.A., கிடைத்தனர். இவர் அடக்கமாதிய சகல நற்குணங்களும் வாய்ந்த தவச்செல் வர். இவ்விருவர்களின் அளவற்ற பக்தியும் இந்நூல் வெளிவருவதற்கு உதவியாய் நின்றது. தணிகை நாயக ரின் திருவருளால் இவர்கள் சீரும் சிறப்பும்நோயிலா வாழ் வும் பெற்றுப் பல்லாண்டு பாரிடைப் பொலிவாராக. எங்கள் திருப்புகழ்ப் பதிப்பு-மூன்று பாகங்களுக்கும் இது ஒரு தொடர்பு நூலாயுள்ள காரணத்தால் இந் நூலைத் திருப்புகழ் நாலாம் பாகம்’ எனவும் கூறலாம். யான் எழுதியுள்ள இவ்வரலாறு பிழையிலதென்ருவது குறையிலதென்ருவது கூறத்துணிந்திலேன். அருணகிரி யாரின் வரலாற்றை ஒருவகைப்படுத்தி எழுதத்துணிந்த ஒரு முயற்சியின் பயன், ஒராசையின் நிறைவு இந்நூல் என்ற அளவுதான் துணிந்து கூறுவேன். எனது துணி வையும் குறைகளையும் ஆன்ருேர் பொறுத்தருள வேண்டும்; ஆண்டவன் கூடிமித்தருள வேண்டும். 'எமை பணி விதிக்குஞ் சாமி சரவண தகப்பன் சாமி எனவரு பெருமாளே ! புவிதனில் எனக்குண் டாகு பணிவிடை கணக்குண்டாதல் திருவுளம் அறியாதோ' - (திருப். 1178) சென்னை, 2–10–1947. } வ. சு. செங்கல்வராயப் பிள்னை