பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:44 அருணகிரிநாதர் திருவிழிமிழலையினின்றும் (53) திருவாவடு துறை (852) க்கு வந்து சொற்பிழை வராது துதிக்க வேண்டும் என்னும் நீதியை உபதேசித்து மயில் வாகனத்தைச் சிறப்பித்துப் பாடினர். பின்பு (54) திருப்பந்தனை நல்லூர் (854-860) என்னும் தலத்தை யடைந்து கந்துகம்’ என்னும் சொல் லுக்குப் பந்து' என்று பொருளிருப்பதால் அத்தலத்தைக் “கந்துகாபுரி எனப் பெயரிட்டுப் (860) பாடினர்; சிவபிரான் தம்மை அடிமையாக ஆட் கொண்டதை எனையடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர்' எனப் பாராட்டினர் (856); சந்தத் தமிழைச் சொரிந்து நின்னைப் பாடும் பாக்கியத்தைப் பாலித்தருளுக. (' நான் உனை நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள் தாராய்' -8601என வேண்டினர். பின்பு (55) மருத்துவக் குடி (853) என் னுந் தலத்தைச் சார்ந்து முத்தமிழ்ச் செழிப்பை நத்திய சீலன் முருகன் எனப்பாடி, மஹாலிங்கப் பெருமான் வீற்றி ருக்கும் மஹா கூேடித்திரமாகிய (56) திருவிடை மருதுாரைச் (862-865) சேர்ந்தனர். பெரியவர்' விற்றிருக்கும் பெரிய தலத்துக்குப் பெரிய பாடல் பாட விரும்பி வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே விளக்கும் அறுகுநுனி என்னும் (862) பெரிய அருமைப் பதிகத்தைப் பாடி வாழ்க்கைத் துன் பங்களை விளக்கி இத்தகைய புல்லிய வாழ்வை உனது அடி யார்கள் பெறுவ தென்ருல் உலகம் உன்னை ஏசிடாதோ பாசநாசா ! என தம்மை ஆண்ட பிரானிடம் விண்ணப் பித்தனர். எனக்குத் தவ நெறி வேண்டும் (864), சிவஞான போதம் வேண்டும் (865) குருநாதனே ! நான் உன் மீது மதுரகவி பாட வேண்டும்; பேரின்பந்தரும் அறிவைப்பெற வேண்டும்; அரிய தமிழ் ஓசை ததும்பும் ஒளி வசனம் என் வாக்கினின்றும் வருகின்ற வழிபாட்டில் நான் பயிலுதல் வேண்டும். இங்ங்னம் அருள் புரிதி எனப் பொருள்படும் படி 'மதுரகவி யடைவு பாடி வீடறிவு முதிர அரியதமி ழ்ோசையாக ஒளி வசன முடைய வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ(863)