பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அருணகிரிநாதர் இந்தப் பெரிய மடத்தில் உள்ள முருக வேளைப் 'போற்றி', 'போற்றி எனத் துதித்து, “அருணகிரிநாத' எனத் தமக்குப் பட்டம் அளித்து அழைத்த அன்பினைப் பாராட்டி, “அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி: எனத் துதித்து, ஆரம்ப அறிவும் இலாத நான் நன்னெறி யில் நிற்க நீ திகூைடி செய்தருள வேண்டும் (தலையறிவி லேனை நெறி நிற்க நீ தீகூைடி தரவேணும்) எனப் பிரார்த் தித்தனர். அதன் பின்னர் [62] ஆடுதுறையைத் தரிசித் துத், தென் குரங்காடு துறை-வட குரங்காடு துறை (883 -885) என்னும் இரண்டு தலங்களையும் சேர்த்துப் பாடி, இப்பிறப்பேனும் உரம் (பயன்) பெற வேண்டும் (885) என வேண்டினர். பின்னர், (63) சிவபுரம் (876) என்னுந் தலத்தைப் பணிந்து அத்தலத்துப் பதிகத்தில் அசுரரை அழிக்கச் சிவபிரான்1 வேல் தந்தனர் எனக் கூறியுள்ளார். அதன் பின் (64) கொட்டையூரைப் (875) பணிந்து அத்தலத் துப் பதிகத்தில் ராவணனுக்கு யாழ் (வீணை) கொடி என் பதையும், திருமால் பூசித்த தலம் கொட்டையூர் என்பதை யும் விளக்கினர். பின்னர்ப் (64A)2 புறம்பயம், (65 சத்தி முத்தம் 1879), (66) பழையாறை 1881), (67| திருவலஞ் சுழி (880) என்னும் பதிகளைப் பணிந்தார். திருவலஞ்சுழிப் பதிகத்திற் கண் வர்ணனையும் எழுபது வெள்ளம் கவி’ கள்3 நீ ராமருக்குச் சேனையாய் உதவி புரிந்தன எனக் கூறப்பட்டதும் கவனிக்கற் பாலன. பின்னர்த் திருவலஞ் சுழியை விட்டு ஆறுபடை வீடுகளில் நான்காவதாகிய 168) திருவேரகம் என்கின்ற சுவாமி மலைக்கு (195-232) வந்து சேர்ந்தார். 1. 'கொம்பனையார்” என்னும் பதிகத்தில் (66) தேவி தந் ததாகக் கூறியுள்ளார். 2. புறம்பயம்-திருப்புகழ் வைப்புத்தலம் -திருப்.28 3. ஏற்ற வெள்ளம் எழுபதினிற்ற வென் ருற்றலாளர் கம்ப ராமாயணம்-நாடவிட்ட படலம் (21.