பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அருணகிரிநாகர் துப் பிள்ளை முருகா 1 முத்தம் தா ! என வேண்டும் பிள்ளைத் தமிழ்-முத்தப்பருவ இயல்பிற் கடவுளைப் பரவின தாகும். உலா வகையில் தன்னை நாயகியாக வைத்துப் பாடிப் பரவியது ' தெருவினில் நடவா’ என்னும் 218-ஆம் பதிகம். 207-ஆம் பாட்டிற் சுராதிபதி, மால், அயன்... சலாமிடு பெருமாள் என வருவதில் சலாம் ' என்னும் ஹிந்துஸ்தானி மொழியுள்ளதால் முன் 35-ஆம் தலமாகிய திருநள்ளாற்றுப் பதிகத்தில் சபாஷ் ' என்பதைக் குறித். தது போல மஹம்மதிய அரசாட்சி ஏற்பட்ட பின் சுவாமி கள் காலம் என்பது தெரியக் கிடக்கின்றது. காவேரிக்கு நேர் வடக்கில் உள்ள தலம் திருவேரகம் (சுவாமி மலை). (200, 205, 209, 220) எள்பதும், அது ஞான தபோதனர் கள் சேரும் தலம் (201, 202) என்பதும், இந்திரன், திருமால், பிரமன் வணங்கிய தலம் (195, 207, 219)-என்பதும், சத கோடி உதய சூரியர்களின் உருவொளி கொண்டது வேலா! யுதம் என்பதும் (207), சிவபிரான் நின்று உபதேசங் கேட்க முருகவேள் ருருவாயமர்ந்து யோகத்திருந்து உபதேசித்த தலம் (199, 200, 215, 219, 224, 226) என்பதும், கயிலை மலையின்) கொடு முடி சுவாமி மலை (221) என்பதும், பஞ் சாகூடிர தியானத்தின் அவசியமும் (207), வள்ளியம்மை பொருட்டு முருகர் காதல் காட்டிய ஆடலும் (209), அவர் செட்டி வடிவுடன் வள்ளியம்மை பால் வந்த லீலையும் (2151,-ராமரின் பாணம் யார் யாரை அட்டது என்பது; |231|-சுவாமிமலைப் பதிகங்களால் அறியக் கிடக்கின்றன. பின்னும், நக்கீரரை மிகப் பாராட்டியுள்ள பதிகம் கடிமா மலர்க்குள் ” (203) என்பது. நக்கீரரது பாட்டின் வளப்ப மும், அவரது வாய்மைச் சொல்லும், அவருக்கு முருக பிரான் இலக்கணங்கள் போதித்த விஷயமும், உலகம் உவப்ப என்று அடி மோனையுடன் அவருக்கு முருக வேள் அடி எடுத்துக் கொடுத்த அருட் ப்ரசாதமும் இப் பதிகத்திற் போற்றப்பட்டுள. காகத்துக்கு ஒரு விழி வந்த கதை “ பாதிமதி நதி ' என்னும் 225-ஆம் பாடலிற்