பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அருணகிரிநாதர் பாராட்டியுள்ளார். அங்ங்னம் கொண்டு வந்தபொழுது சங்க நாதத்தால் தேவலோகத்தில் அவர் வெற்றி பெற்ற தைத் திருப்புகழ் 15-ஆம் பதிகத்தில் உம்பர் சேஆன துளக்க வென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி ' என்றும், 889-ஆம் பதிகத்தில் 'இந்த்ர தாருவை ஞால மீதினிற் கொணர்ந்த சங்க பாணியன் ஆதிகேசவப்ரசங் கன்” என்றும், 1279-ஆம் பதிகத்தில் வானுலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை (சங்கம்) ஊதி மோகித்து விழ அருள் கூரும் நீலமேனி'-என்றும் விளக்கியுள்ளார். தஞ்சையினின்று நீங்கிச் சித்ரா பெளர்ணமி தினத்தில் திருவையாற்றை அடைந்தார். சப்த ஸ்தான உற்சவ அழகைக் கண்ணுரக் கண்டு களித்தார். அந்த (70A) ஏழு திருப்பதிகளையும் (890) ஒரு பாடலில் அமைத்துப் பாடி மகிழ்ந்தார். அந்தப் பதிகத்தில் பெருமானே! முன் உனது பாத தாமரைகளைத் தியானித்து அருணையிற் பாடத் தொடங்கிய திருப்புகழை உள்ளங் குளிர்ந்த உவகையுடன் நான் ஒத எனக்குத் திருவருள் புரிதிஎன்னுங் கருத்தில் 'திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே! சலச மேவிய பாத நினைத்து முன் அருணை நாடதில் ஒது திருப்புகழ் தணிய ஒகையில் ஒத எனக்கருள் புரிவாயே’ (890) என வேண்டித், (71) திருவையாறு (891), (71A)1 கண்டி யூர், (72) பெரும் புலியூர் (895), (73) திருப்பூந்துருத்தி (892), (74) திரு நெய்த்தானம் (893), (7.5) திருப்பழுவூர் (894) என்னுந் தலங்களை வணங்கினர். திருப்பூந் துருத்திப் பதிகத்திற் செய்ப்பதிப் பெருமானைப் போற் றினர். பின்னர்ப் (76) பூவாளுருக்கு (924) வந்தனர். திரு ஞான சம்பந்தப் பெருமான் பூவாளுரைத் தரிசித்ததாகப் பெரிய புராணங் கூறுகின்ற தென்றும், காமர்பதி யதன் கட் சில நாள் வைகி வணங்கி” (பெரியபுரா 五- கண்டியூர்-திருப்புகழ் வைப்புத்தலம். கூேடித்திரக் கோவைப் பதிகம் 1304 பார்க்க. =