பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 59. நோக்கிய பெருமாளே” (330)-சிராப்பள்ளி எனச் செபிக் கும் . அன்பர்தம் மனமாகிய இடத்தை (கோயிலாக) விரும்பிய பெருமாளே- எனப் பாடிப் புகழ்ந்தார். அன்று உலகோர் காலுைம்படித் திருக்கை வேலுடன் மயில் மீது வந்து என்னைஆட்கொண்ட உண்மையைப் புலப்படுத்திய குருநாதனே.-- 'சயில மெறிந்தகை வேற்கொடு, மயிலினில் வந்தெனை யாட்கொளல் சகமறியும்படி காட்டிய குருநாதா”-(331): லாத் துதித்தார். தமது வழிபடு கடவுளாம் சம்பந்தப் பெருமான் 'நன்றுடையானைத் தியதில்லானை......உமை. யொரு பாகம் உடையானை...(சென்றடையாத) திருவுடை யானைச்...... (சிராப்பள்ளிக்) குன்றுடையானை-என இத் தலத்துக்குப் பாடிய தேவாரம் நினைவுக்கு வரச் “சீகாழி மா மு.நி... வந்து பாடும் திருவுடையாய், தீதிலாதவர், 32_6O) LD. யொரு பாலான மேனியர் (332) எனவும் தமது "...உரு வளர் குன்றுடையார்” (331) எனவும் தமது பதிகங்களில் வரும்படிப் பாடியுள்ளது கவனிக்கற்பாலது. திரிசிராப்பள்ளி யில் இருந்தபடியே, தம்மைத் (23) திருமண்ணிப் படிக்கரை என்னும் தலத்திற் கனவிற் ருேன்றி அழைத்த வயலூர்ப் பெருமானை வணங்க விரும்பி, (92) வயலூர் (904–921) சேர்ந்து தரிசித்துத் திரிசிராப்பள்ளிக்கு மீள்வர். ஒரு பதி கத்தில் (334) 'ஜெகதலம் மெச்சும் வயலூர்க்கும் திரிசிராப் பள்ளிக்கும் உரிய பெருமாள் நீ” என இரண்டு தலங்களையும் இணைத்துப் பாடியுள்ளார். திரிசிராப்பள்ளிக்கு உரிய பதி றுை பாடல்களில் ஒன்பது பாடல்களில் வயலூர் சொல்லப் பட்டிருத்தலின் திரிசிராப்பள்ளியிலிருந்தே வயலூரைச் சில காலம் தரிசித்து வந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. திரிசிராப்பள்ளிப் பாடல்களில் 332, 334, 339 எண் னுள்ள பதிகங்களில் சிரகிரி என வருவதால் இம்மூன்று பதி கங்களும் சிரகிரி’ எனச் சென்னிமலையாண்டவன் காதல்’ என்னும் நூலிற் சொல்லப்பட்ட சென்னிமலைக்கு உரிய பதிகங்களாகக் கொள்ளலாம் என மூன்ரும் பாகம் அதுபந்