பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


GO அருணகிரிநாதர் தத்திற் குறித்தோம். ஆணுல், 332-ஆம் பதிகத்தில் 'நன் றுடையானை' என்னும் திரிசிராப்பள்ளித் தேவாரக் குறிப்பு உள்ளதாலும், 334-ஆம் பாட்டில் வயலூருடன் சிரகிரி இணைக்கப்பட்டுளதாலும் சிரகிரி எனச் சுவாமிகள் குறிப்பது திரிசிரகிரி எனக் கொள்வதே பொருந்தும் எனக் கொள்ள வேண்டும். அங்ங்ணம் கொண்டால் சென்னிமலைக்குப் பாடல் கிடைக்கவில்லை எனக் கொள்ள வேண்டும்; அல்லது 339-ஆம் பாடல் பகலிரவினில் என்பதை மாக்கிரம் சென்னி மலையதாக வைத்துக் கொள்ளலாம். திரிசிராப்பள்ளிப் பாடல்களுள்-(i) அந்தோ மனமே" என்னும் 330-ஆம் பாடல் மனப்பாடஞ் செய்யத்தக்க அருமை யான பாடல். அப்பதிகத்தில் உள்ள 'மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உ(ய்)ய மறவாதே’-என்னும் ஒப்பற்ற உப தேசத்தைக் கைப்பற்ற வேண்டும். (ii) 338-ஆம் பாடலில் முருகபிரான் ருத்ராகூடிமாலை அணிந்துள்ளார் என்பது கூறப்பட்டுளது. (iii) புவனத்தொரு என்னும் 340-ஆம் பாடலிற் கூறியுள்ள நரக வேதனை வர்ணனை குறிக்கத்தக் கது; செய்ப்பதியிற் பரமக் குருநாதா-என்றதால் வயலுா ரில் குருமூர்த்தியாய் இவருக்கு அருள் செய்தது புலப்படு கின்றது. (iv) 341-ஆம் பாடலைப்பற்றி 46-ஆம் கூேடித்திரம் கோடிக்குரிய பதிகக் குறிப்பைப் பார்க்கவும். இதில் குருகு கூேடித்திரம் என்பது கோழியூர்-குருகு=கோழி: இந்த கூேடித்திரம் திரிசிராப்பள்ளி எல்லைக்கடுத்த (92A) உறையூர் ான வழங்கும் மூச்கீச்சுரம் ; தேவாரம் பெற்ற தலம். w) 343-ஆம் பதிகம். 'வாசித்துக் காணுெணுதது’-என் னும் அருமைப் பாடலில் பரம்பொருளின் விளக்கம் மிக அற் புதமாகக் கூறப்பட்டுள்ளது. இப் பாடலின் அருமை தெரிந்து பல பெரியோர்கள் இதை மனப் பாடஞ் செய்தார்கள் 1. 344-ஆம் பதிகத்தில் - .ெ ப ண் க ள் 1 இந்த அருமையான விஷயம் திருவாளர் சைவப் பெரியார்-ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர் களால் யான் அறிந்தேன். அவர் எழுதிய குறிப்பு (29-9-1946) வருமாறு: