பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ சிறப்புப் பாயிர வுரை எங்கள் பதிப்பு திருப்புகழ் மூன்ரும் பாகத்தில் யான் எழுதி யுள்ள பூரீ அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திர ஆராய்ச்சியைக் கண்டு திருப்பாதிரிப் புலியூர் பூரீலறு ஞானியார் சுவாமிகள் 1926-ஆம் வருவடித்தில் எழுதி அனுப்பிய குறிப்பு = б) சிவமயம் பூரீமான் வ. சு. செங்கல்வராய பிள்ளை எம். ஏ. அவர்கள் எழுதியுள்ள 'யூரீ அருணகிரிநாத ஸ்வாமிகளின் சரித்திர ஆராய்ச்சியை’ முற்றும் நன்கு படித்தோம். இவ்வித ஆரா சியே வேண்டற்பாலது. பலர் பல காரணங்களால் சரித்திரத்தின் உண்மை காணுவாறு அமைத்து வருகிற இக்காலத்தில் தக்க ஆதாரத்தொடு வெளிவரும் இவ்வகை யாராய்ச்சி எல்லாரானும் விரும்பப்படுமென்று எண்ணு கின்றேம். இவ்வராய்ச்சி யாளரும் இவர் பிதாவும் இவர் உடன்பிறந்தாரும் பூநீ முருகக் கடவுளிடத்து நிறைந்த பத் தியினர்; திருப்புகழ் முதலிய பூரீ அருணகிரியார் நூலில் மிக பழக்கமுடையவர்கள். இவ்வாராய்ச்சியாளர் இச்சரி தத்தைத் திருப்பாதிரிப் புலியூர்ப் பிரமோற்சவத்தினங்கமாக நடைபெறும் அவையில் உபந்நியசிக்கவும் கேட்டோம். அன்பு ததும்பச் சொல்லும்போது கேட்டார் எவரும் அற் புதமடையக் கண்டோம். சரிதத்தின் ஒவ்வொரு பகுதியும் திருப்புகழ் முதலியவற்றின் ஆதாரங்கொண்டே எழுதப்பட் டிருக்கின்றது. பதிருையிரந் திருப்புகழும் கிடைக்குமேல் இன்னும் மிகுந்த சரித்திரப்பகுதி கிடைக்குமே. இவ்வா ராய்ச்சியாளர் திருப்புகழை ஆளும் வல்லமை போற்றத்தக் கது; புகழ் இவர்க்கு உரியதே. இதனை வெளிப்படுத்தும் இவர்க்கும் இவரைச் சார்ந்த ஏனையர்க்கும் வள்ளி மணுளன் வகையமை ஞான முதலிய வளன் வழங்க அப்பெருமானது அடி மலரை நினைக்கின்ரும். உலகம் இதனைக் கொண்டு உவக்குக.