பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அருணகிரிநாதர் திரிசிராப் பள்ளியிலிருந்து 192A) உறையூர் (மூக் கீச் சுரத்தைத் தரிசித்து, வயலூருக்குப் போகும் வழி யில் உள்ள உய்யக்கொண்டான் என்னும் (93) கற்குடியைத் -(345-346) தரிசித்து முருகா! நீ தமிழ்ப் பெருமாள், வயலூர்ப் பெருமாள், கற்குடிப் பெருமாள், (345) என வாழ்த்தி, யமதுrதர் 'எனக்குக் கணக்குக் கட்டு” எனக் கூறி நரக வேதனைகளுக்கு என்னை உட்படுத்து முன், பெரு மானே! நீ வேலேந்தி, மயிலேறி என் பக்கல் வருவாயே (346) என வேண்டினர். இப்பதிகத்தில் 'சித்தியுடைக் கற்குடி’ என்பது அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி: என்னும் தேவார அடியை நினைப்பூட்டுகின்றது. மூவர் தேவாரமும் பெற்ற தலம் கற்குடி. வயலூரிற் சுவாமிகள் பலநாள் தங்கினர். வயலூர்ப் பொய்யாக் கணபதியார் அருளியது தம்மை யாண்ட பிரானது திருப்புகழை நிரம்பப் பாட வேண்டும் என்னும் இச்சை பொங்கி எழுந்தது. வள்ளியைத் தம்மோடு இணைக்க எண்ணிய நமது ஆண்டவரே தமது இச்சை நிறைவேற விநாயக மூர்த்தியை வேண்டினராதலின் நாமும் இத்தலத்துள்ள பொய்யா விநாயகரது திருவருளைப் பெறுவோமாகில் நமது இச்சை நன்கு நிறைவேறும்; அங்ங் னம் விநாயகப் பெருமான வேண்டுவதற்கும் நமது ஆண்ட வரது உத்தரவு வேண்டும் எனக் கருதி, முருக வேள் சந் நிதியில் நின்று நிசிசரரைப் பெலி யிட்டருள் பெருமாளே !' உனது திருவடி, உனது சத்தி வேல், மயில், கோழிக் கொடி இவை தமைச் சதா கருதும் புத்தி எனக்கு நிலைத்திருக்க வேண்டி நான் இன்று இத்தலத்தில் வீற்றிருக்கும் “அருளிற் பொய்யாத கணபதி”யை முறைப்படி வலஞ் செய்து, மற வாது அருச்சித்து வணங்குவன் 'நிசிசரரைப் பெலி யிட்டருள் பெருமாளே! நினது திருவடி சத்தி மயிற் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட...ஒற்றை மருப்பனை 6) 15ն)ԼD Ո՞ՅԵ தொப்பன குட்டொடு*வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே. (விநா. (5)]