பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 அருணகிரிநாதர் யும் கடைந்தார்கள் என்னும் அருமை விஷயம் கூறப்பட் டுளது. வயலூர் முருகனை வயலை அற்புதனே என்றும், * திருமறு (மச்ச ரேகை) ஆயிரத் தெட்டு கொண்ட அழகா ” என்றுங் கூறியுள்ளார். ஆயிரத்தெட்டு மறு கொண்ட அழகு கடவுளுக்கு இருப்பதைச் சீவக சிந்தாமணி என்னும் நூலில், செம்பொன் வரைமேற் பசும்பொன் எழுத் திட்டதேபோல் அம்பொன் பிதிர்வின் மறு ஆயிரத்தெட் டணிந்து வெம்புஞ் சுடரிற் சுடருந் திரு மூர்த்தி 'என வருங் கடவுள் வாழ்த்துச் செய்யுளாலும் (2) அறி கின்ருேம். * = * (x) 919-மூரிவில் மதற்குக் காட்டு'-மன்மதனது வில்லின் வலிமைக்கு எடுத்துக் காட்டாயிருந்தார் முருகர் வள்ளிபாற் காட்டிய மோகத்தால். (xi) 920-ஆம் பாட்டில் உள்ள வேலு மயிலு நினைந் தவர் தந்துயர் தீர அருள் தரு கந்த '-என்னும் அடி மனப் பாடத்துக்கும் ஜெபத்துக்கும் உரியது. இங்ங்ணம் வயலூரிலும் திரிசிராப் பள்ளியிலும் சுவாமி கள் பல காலம் தங்கினர். அருகில் சீரங்கத்தில் நீரங்க ராஜப் பெருமாளை அந்தணர்கள் ஹரிஹரி கோவிந்த கேசவா 1’ (504) எனத்தொழுகின்ற கோலத்தைக் கண்டு களித்துத் (94) திருவானைக்கா (495.508) என்னுந் திவ்ய ஸ்தலத்தைத் தரிசித்தார். திருவானைக்கா பஞ்ச பூதஸ்தலங் களுள் அப்பு ஸ்தலம். திருவானைக் காவுளானச் செழுநீர்த் திரளைச் சென்ருடினேனே -என்பது அப்பர் திருத்தாண் டகம். திருவானைக்காத் திருப்புகழ்ப் பதிகங்களுள் (i) 495-ஆம் பதிகத்தில் விநாயக மூர்த்தியின் வருணனை "குஞ்சர மாமுக விக்கினப் ப்ரபு அங்குச பாச் கரப் ப்ரசித்தன், ஒர் கொம்பன், மகோதரன், முக்கண் விக்ரமகணராஜ கும்பிடுவார் வினை பற்றறுப்பவன் (ன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்றருள் - == குன்றைய ரூபக கற்பகப் பி(ள்)ளை ’- o என வெகு அழகாக அமைந்துள்ளது. இப்பதிகத்தில்