பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 67 ம்பு நீர்த்தமும் , சுந்தர பாண்டியன் மதிலும் சொல் அப்பட்டுள. (ii) 496-ஆம் பாடல்: இதில் திரு நீலகண்ட யாழ்ப் பாண நாயனர் (பாணப் பாவலர்1) சம்பந்தப் பெருமானு ன் வந்து அவரது தேவாரத்துக்கு இசையச் சங்கீத யாழைப் பாடிய விஷயம் கூறப்பட்டுளது. (iii) 499-ஆம் பாடல்: சிவபிரான் இத்தலத்தில் வெண்ணுவல் நீழலில் வீற்றிருப்பது சொல்லப் பட்டுளது. (iv) 500-ஆம் பாடல் (உரைக் காரிகை) என்பதில் இருந்து, 'காரிகை” என்னும் யாப்பிலக்கண நூல் இவர் காலத்தே தமிழ்ப் புலவர்களால் மிகவும் பயிலப்பட்டது என்பதும், எழுத்தாணிக்கு (இபக் கோடு) தந்தத்திற்ை செய்யப்பட்ட பிடி இருந்த தென்பதும், சிலந்தி பந்தல் வலை யிட்டுப் பூசித்த தலம் திருவானைக்கா என்பதும், 'சேவிக்கும் எல்லைத் திருசாலக2 நலமும்” எனக் காளமேகப் புலவரால் திருவானைக்கா வுலாவிற் சொல்லப்பட்டதைத் திருச் சாலகச் சோதி’ எனச் சுவாமிகள் குறித்துள்ளதும் கவனிக்கற் I III ԾՆ) Ճ Tս (v) ஒல மறைகள்” என்கின்ற 501-ஆம் பாடலிலும், 'பரிமள' என்னும் 507-ஆம் பாடலிலும் திருவானைக்காவில் தேவியின் பெயர் அகிலாண்ட நாயகி என்பதைக் குறித் தும், 501-ஆம் பாடலில் சுவாமியின் பெயர் “வெண்ணுவல் அரசு ' எனக்குறித்தும், காவிப்பூவை என்னும் 503-ஆம் பாடலில் (வராக அவதாரத்து) வராகத்தை அடக்கிய மூர்த்தி ஷண்முகரே 5T 5ՇT விளக்கியும், 'குருதி' என்னும் 504-ஆம் பாடலில்-(i) ஆறங்கம் வல்லவராய் வேள்வி நடத்தும் அந்தணர்கள் சீரங்கத்திற் பள்ளி கொண்டிருக்கும் 1 செந்தமிழ் பாணனுர், சந்த இசைப்பாணர், நல்ல இசையாழ்ப் பெரும்பாணர் -பெரிய புராணம். 2 சாலகம்-பல கணி வழியாய் சோதியை (ஈசனை)த் தரி சித்தல், சாலகம் என்பதற்குச் சிலந்தி வலை எனவும் பொருள். -