பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Æ அருணகிரிநாதர் சீரங்கராஜப் பெருமாளை ஹரிஹரி கோவிந்த கேசவ : என்னுந் திருநாமங்களாற் பஜித்து வணங்கினர், (ii) திரு வானைக்காவிற் சிவபிரான் திருநாமம் ஜம்பு நாதர் , (iii) பிரமனும் இந்த்ராதி தேவர்களும் ஜம்பு நாதரை வழி பட்ட னர் என்பவற்றை விளக்கியும் அருமையாகப் பாடியுள்ளார். அவ்வத் தலத்து சுவாமி, தேவி-திருநாமங்களைத் திருப் புகழில் அருணகிரியார் வடமொழி நாமங்களாற் கூறியுள்ள தால் டிை திருநாமங்களைத் தமிழ்ப் பெயரால் தேவாரப்பாக் களிற் குறித்த நாயன்மார்கள் காலத்துக்குப் பின்னர் தான் தமிழ் நாமங்கள் வழக்கற்று வடமொழி நாமங்கள் பிரபலமா யின என்பது புலப்படுகின்றது. வெண்ணுவலுளார்’ எனத் தேவாரத்தில் வந்ததை " ஜம்பு நாதர் ” எனத் திருப்புகழிற் பார்க்கின்ருேம் ; ஆதலால், 9-ஆம் நூற்ருண்டுக்கும். 15-ஆம் நூற்ருண்டுக்கும் இடையிலுள்ள காலத்தே தான் தலப் பெயர், சுவாமி பெயர், தேவி பெயர்-இவை சிலவும் பலவும்-வட மொழியில் ஏற்பட்டுப் பின்னர் வழக்கிலும், நூல்களிலும் ஆளப்பட்டு வருவனவாயின. மறைக்காடு என்பது வேதாரணியம் எனவும், முது குன்றம் என்பது: விருத்தாசலம் எனவும், ஆனைக்கா என்பது கஜாரணியம் எனவும், தேன் மொழிப்பாவை என்பது மதுர வசனும்பிகை எனவும், அங்கயற்கண்ணி என்பது மீனுகூ எனவும், தான் தோன்றியப்பர் என்பது சுயம்பு நாதேசுரர் எனவும், புற்றி டங் கொண்டார் என்பது வன்மீகநாதர் எனவும் இவை: போல்வன பிறவும் வழங்கி வருவன காண்கின்ருேம். (பக்கம் 32 பார்க்க). (vi) 506-ஆம் பாடலில் ராமாயணம் (கிஷ்கிந்தா காண் டத்தையும்), 508-ஆம் பாடலில் முநிவர்கள் 'ஆதித்யாய’ எனத் தர்ப்பன காயத்ரி ஜப அருச்சனை செய்வதையும், தேர் வீதியில்1 திரு நீறிட்டான் மதில் விளங்குவதையும் எடுத்துக் கூறியுள்ளார். 1 ருநீறிட்டான் மதில் :-இது சிவபிரான் சித்தராய் எமர். ు ಘೀವ°ಸೆ". 馨 வித்தது; அவர் கொடுத்த திருநீறு அவரவர் உண்மை