பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 71 நித்தம் அத்தகைய, திருப்புகழ்ப் பாக்களைப் பாட வேண் டும். யாம் உறையுமிடம் விராலி மலை. நீ அத்தலத்துக்கு வருவாயாக!' எனக் கட்டளை யிட்டு, ஞானப் பொருள்களை விளக்கி, ஞான அமுதை ஊட்டி விட்டோம், உன் மல மாசு யாவையும் வீட்டி விட்டோம்” என மிக்க கனிவுடன் உரைத்து மறைந்தார். விழித் தெழுந்த அருணகிரியார் எம்பிரானது தாளினையைச் சற்றுங் கருதாத இவ்வடி யேனை விராலி மலைக்குவா என அழைத்த கருணை யிருந் தவா றென்னே 1 என ஆச்சரியப் பட்டுசோலைபுடை சுற்று வயலூரா ! தாமரையில் மட்டு வாசமல_ரொத்த தாளினை நினைப்பில்-அடியேனை... விராலி மாமலையில் நிற்பம் நீ கருதியுற்று வா என அழைத்து என் மனதாசை மாசினை யறுத்து ஞானமுதளித்த வாரம் இனி நித்தம் மறவேனே’’ (915. எனப்பாடி நன்றி பாராட்டினர். கல்லினின்றும் நார் உரித்தது போல என் நெஞ்சக் கன கல்லைக் கனியாக்கி எனக்கு அமி தப் பதவி யளித்த பெருமானே! எனப் பொருள் படும்படிவயற்ப தி மன்!ை கன்ர்ை(கல்-நார்) உரித்த என் மன்ன! திே: 'ಘೀ ಫಿ; ಸ್ಲಿ ႕ီဗွီရှီ’’ என்றும், 'புயற் பொழில் வயற்பதி யினிற் பொருள் ப்ரியத்;டு புலப்பட எனக்கருள் பெருமாளே” (271)1 . என்றும் போற்றினர். திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசு சுவாமிகளைச் சிவபிரான் திருவாய்மூருக்கு வருக என அழைக்க அவர் எழுந்து விரைந்து சென்றது ப்ோல அருணகிரியாரும் உடனே வயலூர்ப் பெருமா னிடம் ஆண்டவனே! நீ விராலி மலைக்கு அழைக்கின்ருய், நான் செல்கின்றேன்” என விண்ணப்பஞ் செய்து விராலி மலைக்குச் சென்றனர். (101) விராலிமலையில் (550-365) 1. 271-ஆம் பதிகம் இருப்பவல் என்னுந் திருப்புகழ்ப் பாவின் ஈற்றடிக்கு இவ்வாறு ஒரு பாட பேதம் ஒர் ஒலைப் புத்த்க்த்தில் இருந்தது. (பக்கம் 36-ம் பார்க்க.)