பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T8 அருணகிரிநாதர் தலத்தைத் தரிசித்து மிக உருக்கமான விரகற நோக்கி யும் என்னும் அருமைப் பதிகத்தைப் பாடினர். பின்னர் (117) தென் சேரிகிரியைத் (396-397) தரிசித்துப், (118) பட்டாலி-சிவமலைக்கு 1943-945) வந்தனர். இத்தலத்து மூன்று பாடல்களிலும் வயலூர்ப் பெருமானப் போற்றி யுள்ளார். 944-ஆம் பாடலில் “கொக்காக நரைகள் வரு முனம், இக்காய இளமையுடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை யருளாதோ !” என்ற தலுைம் முன் (101) விராலிமலைக் குறிப்பின் கீழ்க் குறித்தவாறு இத்தல யாத் திரை செய்த பொழுதும் சுவாமிகள் இளவயதினர் என் பது நன்கு புலப்படுகின்றது. இப்பதிகத்திற் சுந்தரமூர்த்தி த.வாமிகள் பொருட்டுச் சிவபிரான் பரவையாரிடம் துர்து சென்ற லீலையைப் பாராட்டி யுள்ளார். 945-ஆம் பாட வில் 'கொங்கிற் பட்டாலி" என்று பட்டாலியூர் உள்ள இடத்தையுங் குறித்துள்ளார். வயலூரிற் 'சிவகலை யலதினி யுலக கலைகளும் அலம் அலம்’ (912) என்றவர் பட்டாலியூர்ப் பதிகத்தில் (945) சிவ நூலின் மந்த்ரப் ப்ரஸ்தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம் வம்பிற் சுற்ருது பரகதி யருள்வாயே’ என்ருர். கதற்று மநேகங் கலைக் கடலூடுஞ் சுழலாதே கழற்புணை நீ தந்தருள்வாயே, எனத் திருப்புகழிலும் (257), கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ எனக் கந்தரநுபூதியிலும் (32) முறை .யிட்டுள்ளார். இங்ங்னம் அருணகிரியார்க்குச் சுருக்க வழியே மிக ஆவல். பிறரும் அச்சுருக்க வழியையே கைப்பற்றிப் பிறவிக்கரை யேறவேண்டும் என்பது அவர் கருத்து: ஆனது பற்றித் தான் 'காட்டிற் குறத்திப் பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் விட்டிற் புகுத்ல் மிக எளிதே..யோகிகளே’எனக் கந்தரலங்காரத்திலும் (85), தும்மும்போது குமர சரணம் எனச் சொல்லுங்கள், உய்வீர்கள் ('துமிக் குமர சரனம் என்னிர்-உய்வீர்”) எனக் கந்தரந்தாதியிலும் (97) மக்கள் சுருக்கமாகவும், சுலபமாகவும் அநுட்டிக்க க்கூடிய