பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அருணகிரிநாதர் சிவமாய் விளங்குகின்ற இம் மஹா கூேடித்திரத்தை மனத்தினுற் கூட இதுகாறும் சேவித்ததில்லையே எனத் துக்கித்து 'உனது பழநிமலை யெனும் ஊரைச் Gಿಸಿ!" எனப்பாடித் தமது ஆராமையை வெளியிட்டார். பழநி மலையின் அடிவாரத்தி லுள்ளதும் ஆறுபடை விடுகளில் மூன்ருவதுமான திருவாவினன் குடியை முதலில் தரிசித்தார்-அவர் காலத்திற் சேர மன்னரைச் சேர்ந்த ப்ரதேசத்திற் கொங்கு நாட்டில் வைகாவூர் நாடு என்னும் பகுதியைச் சார்ந்த தலம் ஆவினன் குடி. இது நாத விந்து என்னும் (100) பாட்டில் 'கொங்கு வைகாவூர் நடைதில் ஆவினன்குடி, என வருதலால் அறியக் கிடக்கின் றது. இப்பதிகத்திற் கூறப்பட்ட Trg செம்பிா நாடு என் பது சோழ நாட்டின் ஒரு பகுதி. 'ஆதியந்த உலா என் பது அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரும் பூநீ சுந்: தரமூர்த்தி சுவாமிகளுக்கு உயிர் நண்பருமான சேரமான் பெருமாள் நாயனுர் (கழறிற் றறிவார் நாயனர்) பாடிய :திருக்கைலாய ஞான உலா' என்னும் நூல். பிரபந்த வகைகளுள் ஒன்ருன'உலா’க்களுள் இதுவே முதல் உலா, ஆதலால் இவ்வுலா 'ஆதி உலா' என்னும் பெயரோடு விளங்கலாயிற்று. இது சைவத் திருமுறைகள் பன்னிரண் டுள் பதினுேராம் திருமுறையிற் சேர்க்கப்பட்ட ஒரு அருமை யான நூல். சுவாமிகள் காலத்திற் பழநி சேர ராஜனது நாட்டைச் சேர்ந்த தலமாதலின் சேரமானையும் அவர் நூலை யும் சிறப்பித்தனர் போலும். 103-ஆம் பாடலில் 'ஆலி வெந்து' என்பதில் ஆலி என்பது குண்டிகை நீர். 105-ஆம் பாடலில் திருப்புகழை நித்தம் பாடும் அன்பை வயலூரிற் பெருமான் தமக்கு அருளியதைப் பாராட்டிப் புகழ்ந்தனர் (பக்கம் 70 பார்க்க). "அபகார நிந்தை” எனத் தொடங்கும் 106.ஆம் பாட்டில் முருகபிரான் தமக்கு ஜெபமாலை தந்த பேற்றைக் கூறின்ர். 109-ஆம் பாட்டில் 'ஜெகமேல் மெய் கண்ட விறல் பெருமாளே” என்பது ருத்ர ஜன்மராய்த் தமிழாய்ந்து உண்மைப் பொருளை முடிவு கட்டிச் சங்கத்