பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 81 தாரது கலகந் தீர்த்த திருவிளையாடலைக் குறிக்கின்றது போலும். 110ஆம் பாட்டில் 'அமரர்க் கிறையே வணங்கிய பழ.த்ெ திருவாவினன் குடி' என்பதல்ை இத்தலம் இந்தி ர ன் பூசித்ததென்று தெரிகின்றது. 111-ஆம் பாட்டு 'வஞ்சனை மிஞ்சிய' என்பதில் திருவா வினன் குடியில் உள்ள எல்லா மலைக்குன்றுகளிலும் திரு முருகன் விளையாடுகின்ருன் என்பது-'திருவாவினன் குடி குன்றுக ளெங்கினுமே வளர்ந்தருள் பெருமாளே” என வரு வதால் தெரிகின்றது. 113-ஆம் பாட்டில் "யாவர்க்கும் கீழாம் அடியேன்” ஏன் றுக் கரையேற்றிய திருவடிகளை மறவேன் 'சடலனை, சவுந்த ரிகமுக...பதமொடு-மயிலேறித் தழைந்த சிவக்ட்ர் தன்ையென மனதினில் அழுந்த உரை செய வருமுக நகையொளி தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே" என்ருர். 115-ஆம் பாட்டு-"குன்றுங் குன்றும்’-என்பது-மெல் லோசை மிக்குச் சந்த இன்பம் ததும்பும் ஒர் அருமைப் பாட்டு. 117-ஆம் பாட்டு 'புடவிக் கணிதுகில்’-என்பதில் 'பரன் வெட்கிட வுளம் மிகவும் வெகுண்டக் கனியைத் தரவிலை யென ... பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் பெருமாளே”என்னும் அடியில் ஈசன் பழம் தரவில்லை என வெகுண்டு முரு கன் பழநிக்கு வந்த புராண சரிதம் கூறப்பட்டுளது. 118 முதல் 123 வரையிலுள்ள ஆறு பாடல்கள் விரை யில் எழுந்தருளியுள்ள பழநிப் பெருமானே' எனப் பொருள் தரும்படிப் பாடப்பட்டுள. சுவாமிகள் பழநியில் இருந்த காலத்தில் அவருக்கு ஒர் அரிய நண்பர் கிடைத்தார். அவ ரைக் கலிசைச் சேவகன் என்றும், காவேரி சேவகன் என் றும் சுவாமிகள் கூறுவர். அவர் வீரை என்னுந் தலத்தில் பழநி யாண்டவருடைய திருவுருவம் ஒன்றமைத்து வழி அ-6