பக்கம்:அருமையான துணை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நஷ்டமே லாபம்

வள் தன் துணைவியாக வந்து சேராதது தனது வாழ்க்கையின் பேரிழப்பு ஆகும் என்று ராஜாகிருஷ்ணன் நம்பினான் தன் வாழ்வில் மலரவேண்டிய வசந்தம் தோன்றாமலே, வரண்ட கடுமையான கோடை புகுந்து தன்னுடைய இளமைக் கனவுகளை, இனிமை நினைவுகளை, ஆசைத் திட்டங்களை எல்லாம் தீய்த்துக் கருக்கிவிட்டது என்று அவன் உள்ளம் சதா குமைந்து கொண்டிருந்தது.

அவன் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான்!. அவளை மையமாக்கி எத்தனே எத்தனை இன்பக் கனவுகள், ஆசைக் காவியங்கள் கற்பனையில் ஆக்கி மகிழ்ந்து வந்தான்: "அடி வசந்தா, அனைத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டாயேடி, பாவி!" என்று ராஜாகிருஷ்ணன் மனம் அடிக்கடி கொதித்துக் குமுறுவது வழக்கமாயிற்று.

-வசந்தா. . . வசந்தா. . .வசந்தா, . எந்தப் பெயரை ஜெபிப்பது அவனுக்கு முன்பு இன்பக் கிளர்வும் கிளுகிளுப்பும் உண்டாக்கியதோ, அதுவே இப்போது ஆத்திரத்தை, கசப்பை, வெறுப்பைக் கிளறிவிடும் சொல்லாக மாறியிருந்தது. ஆயினும் அதை அவன் மனசினால் நினைக்காதிருக்க இயலவில்லை.

-ஏடி வசந்தா, வஞ்சனேயின் திருஉருவே! நீ பெரிய நடிப்புககாரி. என்ன பசப்புகள் பசப்பினாய் ஏமாற்ற்களை ஏமாற்று என்று தெரியவிடாதபடி நடித்து என் மீதே உனக்கு அளவிலா ஆசை என்பதுபோல் பாவனைகள் பண்ணி. . . சமயம் வத்தபோது பணமும் காரும் பகட்டும் பெருமையும் கொண்ட எவனோ வெறும்பயலுக்கு மணமகள் என்று மின்னி மினுக்கிச் சிங்காரித்துச் சிரித்துக்கொண்டு போய்விட்டாயே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/10&oldid=966436" இலிருந்து மீள்விக்கப்பட்டது