பக்கம்:அருமையான துணை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ள பார்ட்காரி 姆瑟 அடியைக்கொன்று மிதித்து அமர்க்களம் செய்து முடித் ததும், காமாட்சி துள்ளிப்பாய்வாள். அடுத்த அடிக%ாப் பாடி. வேலைத்தனங்கள் செய்து காட்டுவாள். நூலேணியில் நேராக ஆறுவதும் தலைகீழாக இறங்குவதும் அவள் செய்து காட்டும் சாதனைகளில் ஒன்முக அமைந்தது, கம்பெனி பிழைத்தது. புகழ் எங்கும் பரவியது. மனமோகன நாடக சபாவின் ஜில் சதாரம் நாடகத்துக்கு ஏகப்பட்ட பணம் வசூலாகும். அதே நாடகத்தைத் திரும்பத் திரும்ப நடிக்கவேண்டிய அவசியமும் ஏற்படும். அதில்தான் காமாட்சியின் நூலேணி சர்க்கஸ் இடம்பெற்றிருந்தது. - மூன்று வருட காலம் இப்படி போடு போடு என்று போட்டு நொறுக்கிய காமாட்சி திடீரென்று ஒருநாள் இருளில் பதுங்கிவிட்டாள். காத் தலிங்கம் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார். அவரும் மேடை வாழ்வை விட்டு ஒதுங்கி பிருந்தால், சரி இரண்டு பேரும் சேர்ந்து வாழ எங்கேயோ போய்விட்டார்கள் என்று முடிவு கட்டியிருக்கலாம். அப்படி நடக்கவில்லை. கள்ளபார்ட் காத்தலிங்கத்தின் அட்டகாசங்கனோ, இதர நடிகர்களின் திறமையோ, சங்கீத சரமாரிகளோ , ஆர்மோனியச் சக்கரவர்த்தி அங்கப்பாவின் கைவரிசையோ, கோடையிடி கொல்லம் குமரப்பாவின் மிருதங்க முழக்கங் களோ, மதுரை பூரீமன மோகன முத்தமிழ் கல வித்வ சங்கீத நாடக சபா'வின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தில் தாங்கிக் காப்பாற்ற முடியவில்லை. நலிந்து மெலிந்து மரணம் எய்தியது அது. அதன் பிறகு காத்தலிங்கம் பற்றிய செய்தி களும் காதில் விழவில்லை. கள்ளபார்ட் காமாட்சி இந்த ஊரில் இருக்கிருள். அவளைக் கண்டு பேச வாய்ப்புகிட்டும் என்று தெரிந்ததும், அவளிடம் அவளது திடீர் நாடக மேடை துறவுபற்றியும் காத்தலிங்கம் பற்றியும் விசாரித்து அறியவேண்டும் எனும் ஆசை எனக்கு ஏற்பட்டது. அவள் திடுமென நடிக்க வந்ததில் அதிசயம் எதுவும் இல்லை. பிழைப்புக்காக நாடகத் தொழிலே ஏற்றிருப்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/100&oldid=738657" இலிருந்து மீள்விக்கப்பட்டது