பக்கம்:அருமையான துணை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ள பார்ட்காரி 93 காமாட்சி. அதில் தனிப் பெருமையும் மகிழ்வும் தொனித் தின . 'நீங்க கூட அருமையாத்தான் நடித்தீங்க. அதிலும், அந்த நூலேணி வேலை...ஆகா! என்று வியப்புச் சொல் உதிர்த்தேன். "நீங்க ஜில் சதாரம் பார்த்திங்களா அந்த நாளிலே?" என்று அதிசய பாவத்தோடு அவள் விசாரித்தாள். "ஒரே ஒரு தடவை பார்த்தது உண்டு, உங்க கள்ள பார்ட்டை பார்ப்பதற்கென்றே நாங்க சிலபேர் போளுேம். எங்க ஊரிலிருந்து அஞ்சு மைல் தள்ளி உள்ள டவுனில்தான் நாடகம். எவ்வளவு கூட்டம்! என்ன வரவேற்பு: அப்போ தெல்லாம் கள்ளபார்ட் காமாட்சி என்ற பேச்சுத்தானே எங்கும் என்றும் சொன்னேன். நேர்மையான புகழ்ச்சி எந்தக் கலைஞரின் உள்ளத்தையும் தொடாமல் போவதில்லை. அது எழுப்புகிற உளக் கிளர்ச்சியையும் முகமலர்ச்சியையும் எதிரே இருப்பவர்கள் நன்கு உணர முடியும். காமாட்சியின் முகத்திலும் ஒரு பிரகாசம் ஊர்ந்து மறைந்தது. எனினும் அவள் அடக்கத்தோடு சொன்னுள்: "எல்லாம் அவங்க தந்த பிரசாதம்தானே! அவுக என்னைக் கண்டு, எனக்கு நாடகமேடை வித்தை கத்துத் தராமல் போயிருந்தால், நான் எங்காவது அடுப்படியிலே கிடந்து வெந்து புழுங்கவேண்டியவதானே?” அவள் காத்தவிங்கம்மீது பக்தியே கொண்டிருந்ததாகத் தோன்றியது. - காத்தலிங்கத்துக்கு நீங்கள் உறவு முறைதாஞ?" சொந்தமின்னுதான் சொல்லனும். எங்க ஐயா என்னே கரக ஆட்டத்திலே பழக்கிவிடனுமின்னு. ஆசைப்பட்டாரு. அதுக்கு ஏற்பாடு செய்திருந்தாரு ஒரு சமயம் அவுசு இந்த இருக்கு வந்தபோது, எங்க ஐயா என் ஆட்டத்தைப் பார்க்கும்படி அவுகளே அழைத்து வந்தாரு. அப்பவே அவுசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/102&oldid=738659" இலிருந்து மீள்விக்கப்பட்டது