பக்கம்:அருமையான துணை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளபார்ட்காரி 莎莎 உங்கள் நடிப்பைக் கண்டு மகிழ்ந்த துரை, அவர்களது வழக்கப்படி உங்கள் கையைப் பிடித்துக் குலுக்கி, ஆங்கிலத் தில் பாராட்டுரை வழங்கினர். அவர் மறுபடியும் அவரது இடத்துக்கு வந்து அமர்ந்ததும், நீங்கள் மேடை முன் வந்து நின்று, சிரித்துக்கொண்டே, துரை அவர்கள் கைவிரலில் கிடக்கிற மோதிரத்தை எனக்குப் பரிசாகத் தருவார்கள் என எதிர்பார்த்தேன்; ஆனல் துரை என்னை ஏமாற்றிவிட்டார் என்று சொன்னீர்கள். அது அவரிடம் ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லப்பட்டதும், அவரும் சிரித்தார், சிரித்துக்கொண்டே தன் கைவிரலைப் பார்த்தார், திடுக்கிட்டார். அங்கே மோதிரம் இல்லை, நீங்கள் சிரித்தவாறே கள்ளனடா கள்ளனடா, தெற்கத்திக் கள்ளனடா!' என்று பாடி, ஆட்டம் போட்டு மோதிரத்தை உயர்த்திக் காட்டினிர்கள். தனக்குத் தெரியாமல், தன் கையில் கிடந்த மோதிரத்தை நைலாகத் திருடிவிட்டதை அறிந்து கலெக்டர் துரை திகைத்துப் போளுர், நீங்கள் மேடையிலிருந்து கீழே வந்து, அவரை பணிவுடன் கும்பிட்டு, சும்மா வேடிக்கை பண்ணி னேன், துரை பெரிய மனசுபண்ணி என்ன மன்னிக்க வேண்டும் என்று சொல்லி, மோதிரத்தை அவரிடம் கொடுத் தீர்கள். அவர் சிரித்தார், உன்னை அரஸ்ட் செய்யோனும்: இனி நீ திருடனு ஆக்ட்பண்ணப்படாது; தடை போடனும் என்று கொச்சைத் தமிழில் சொன்ஞர். அந்த மோதிரத்தை உங்களுக்கே பரிசாக அளித்துவிட்டார். இல்லையா? நான் பேசப்பேச, காமாட்சி வியப்புடனும், உள்ளுற அரும்பி மலர்ந்த சந்தோஷப் பெருக்கோடும் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நீங்கள் நன்ருக ஞாபகம் வைத்திருக்கிறீர்கள், ஏயப்பா, அது நடந்து எவ்வளவு வருஷமாச்சு!" என்ருள். 'நீங்கள் மறந்திருப்பீர்கள். . . . இல்லே இல்லை. அதை நான் மறக்கவே முடியாது!’ என்ற அவசர மறுப்புரை அவளிடமிருந்து வந்தது. அதற்குப் பிறகு கள்ளபார்ட் காமாட்சி மேடையில் தோன்றவேயில்லை, கலெக்டர் துரை தடை உத்திரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/104&oldid=738661" இலிருந்து மீள்விக்கப்பட்டது