பக்கம்:அருமையான துணை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அருமையான துனே போட்டுவிட்டார். அதுதான் காரணம் என்று அப்போது சிலர் சொன்னுர்கள்...' "அவர் ஏன் தடை போடுகிருச்? அவர்தான் ரசித்துப் பாராட்டிஞரே. அவர் உண்மையான ரசிகர். மறுநாள் என் கள்ளபார்ட் திறமையையும் பொருத்தத்தையும் பாராட்டி கடிதம் எழுதி சர்டிபிகேட்டும் அனுப்பியிருந்தார். அதெல்லாம் இன்னமும் அப்படியே இருக்கிறது என்று அவள் அறிவித்தாள். "நான் ஏன் நடிப்பதை விட்டுவிட்டேன் என்றுதானே கேட்க விரும்புகிறீர்கள்’ என்று அவளே தொடர்ந் தான். 'எனக்குப்பிரியம் இல்லை, விட்டுவிட்டேன்...ஆக்டு பண்ணினது போதும் என்று மனசுக்குப்பட்டது, நின்றுவிட்டேன்... இப்படித்தான் நான் அந்தச் சமயத்தில் சொல்லிவந்தேன். ஆளுல் இந்தப் பதில் உங்களுக்குத் திருப்தி அளிக்காது என்பது எனக்குத் தெரியும், உங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று எனக்கு ஏளுே தோன்றுகிறது. கலை உள்ளம் பெற்ற ரசிகராகவும், கலைமீதும் கலைஞர்களிடமும் அக்கறை கொண்டவராகவும் இருக்கிறீர்கள். அதனுல் உங்களிடம் உள்ளதைச் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்..." இதைச் சொல்லிவிட்டு, அவள் சிறிது நேரம் மெளன மாக இருந்தாள். பிறகு பேசிளுள்: "புலமைக் காய்ச்சல் என்று சொல்வார்கள். அதுபோல் கலைக் காய்ச்சல் உண்டு என்றும் சொல்லவேண்டும். அவுக தான் எனக்குப் பயிற்சி அளித்து மேடை ஏற்றினுக. என்ன முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் முக்கியம் அல்ல. ஒரு குமரிப் பெண் க ள் ள ன் வேஷம் போட்டு ஆடினுல், பனிக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்; பண வசூலும் ம் என்பதுதான் முக்கிய நோக்கம். அவுக எதிர் இதைவிட நல்ல வெற்றி கிடைச்சுது, அதோடு அவுக எனக்கு ன பெயரும் கவனிப்பும் வந்து குவிஞ்சுது. ஊர் ஊரிலே, மாலையும் மெடலும் எனக்கு நிறையவே கிடைச்சுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/105&oldid=738662" இலிருந்து மீள்விக்கப்பட்டது