பக்கம்:அருமையான துணை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



100

அருமையான துணை

செந்தியின் பெரியப்பா செந்திவேல் பிள்ளையையும் ஒரு சமயம் வெறி நாய் கடித்துவிட்டது. வயிற்றில், தொப்புள் அருகில் ஊசிபோட்டுக்கொண்டார். நாற்பது நாட்கள். ஊசி என்றால் எப்படியாப்பட்ட ஊசி! கோணி ஊசி பருமன் இருக்கும்! அதை வைத்து, தொப்புளைச் சுற்றி நாற்பது ஊசிகள். தினந்தோறும் வலி சகிக்காது. அப்படிக் குத்திக் கொண்ட பிறகாவது சுகம் கண்டாரா? குணமாகிவிட்டது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒருநாள்-ஏதோ விஷநாள் தான்-கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு, ரேசரை வைத்து தாடி மீசையை சிரைக்க ஆரம்பித்தார். லேசாக வெட்டிவிட்டதோ, காயம் பட்டு ரத்தம் கசிந்ததோ தெரியலே. உடனே லொள்-லொள்னு குரைக்கத் தொடங்கிவிட்டார். குரைத்துக்கொண்டே கிடந்து, வலிப்பு கண்டு, செத்தேபோனார்.

இப்படி செந்தியின் பாட்டியும், அத்தையும், பெரியம்மாவும் அடிக்கடி சொல்லிச் சொல்லி அவன் உள்ளத்தில் பயம் விதைத்துப் பயிரிட்டு வந்தார்கள்.

'நம்ம குடும்பத்துக்கே இது ஒரு சாபக்கேடு மாதிரி. யாரு வயிறு எரிந்து ஏசினார்களோ! நம்ம குடும்பத்து முன்னோரிலே எந்தப் புண்ணியவான் எவர் குடியைக் கெடுத்தாரோ! அல்லது எந்த ஏழை எளியதை நாயைவிட்டு விரட்டி விரட்டிக் கடிக்கப்பண்ணி சித்திரவதை செய்தாங்களோ? அந்தப் பாபம் இப்படி நம்ம குடும்பத்து மேலே குவிந்து கிடக்குது. எத்தனை தலைமுறைக்கு இதுமாதிரிப் பழிவாங்கப் போகுதோ?' இதுதான் செந்தியின் பாட்டி அகிலாண்டத்தம்மாளின் ஓயாத புலப்பமாக இருந்தது, அவள் சாகும்வரை.

செந்தி சுயமாக எண்ணிப் பார்க்கும் ஆற்றல் பெற்று விட்டதும், இந்த ரகமான பேச்சுக்கள் அவனுள் விதம் விதமான பய அரிப்புகளை வளர்த்தன.

நாயினுள் கடிக்கப்பட்டு, கஷ்டப்பட்டவர்கள்-அவனுடைய தாத்தா, மாமா, பெரியப்பா-எல்லோரும் 'செந்தி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/109&oldid=1306794" இலிருந்து மீள்விக்கப்பட்டது