பக்கம்:அருமையான துணை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அருமையான துணை


முந்திய உனது பேச்சுகளும் சிரிப்புகளும், கொஞ்சுதல்களும் செயல்களும் உண்மையானவை என்றால், உன் உள்ளத்து உணர்ச்சிகளின் ஊற்றெடுப்ப்கள் என்றால், புதிய ஏற்பாட்டுக்கு இணங்காமல் நீ என்னோடு அல்லவா வந்திருக்கவேண்டும்? கள்ளி,வஞ்சகி, ஏமாற்றுக்காரி. . .

பெருமூச்செறிந்து, கசப்போடு கரித்துக் கொட்டுவதே அவனுடைய வாழ்க்கை நியதி ஆகிவிட்டது.

வசந்தா தனக்கில்லாமல் போய்விடக்கூடும் என்று ராஜம்கிருஷ்ணன் எண்ணியதே இல்லை. எண்ணிப் பார்க்க தோன்றக்கூட இல்லை அவனுக்கு. அவள் சதா அவனோடு சிரித்து விளையாடிக் கலகலத்துத் திரிந்து கொண்டிருந்தாள். எதிரில் இல்லாதபோது அவள் நினைப்பாகவும் தூக்கத்தில் கனவுகளாகவும் அவள் அவனுள் நிறைந்திருந்தாள். கவலை என்பதறியாக் கவிதை அவள். அவனது கவலையையும் பொங்கி எழும் தன் சிரிப்பால், இனிய பேச்சால், போக்கிவிடும் களிப்பின் ஊற்று. காட்சிக்கு இனிய ஓவியம், அவள் அசைவுகள் தனி நாடகம். அவன் ரசனைக்கு இனிய இலக்கியம்.

வசந்தா சூரியனின் பொன்னொளி போல் அவன் வாழ்வில் பிரவேசித்தாள்.

அப்போது அவளுக்குப் பதினாலு அல்லது பதினைந்து வயதிருக்கலாம். தோழிகளோடு கலகலவெனச் சிரித்து, கலீரெனப் பேசி, அவள் ஓடிவிளையாடுவதை அவன் தன் அறையிலிருந்தே கவனித்து ரசிப்பது வழக்கம். அந்த அறைக்கு அண்மையில்தான் அவன் குடிவந்திருந்தான். அவள் வீடு அதன் அருகிலேயே இருந்தது.

ஒருநாள் அவள் திடுமென அந்த அறைக்குள் புகுந்தாள். "நான் அங்கே இங்கே போகிற போதும் வருகிற போதும், என்னேயே, என் முகத்தையே கூர்ந்து பார்க்கிறீர்களே? அங்கே என்ன இருக்குதாம்?' என்று கேட்டாள்.

அவள் அப்படிவந்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்பாள் என்று ராஜாகிருஷ்ணன் எண்ணியவன் அல்லன். அதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/11&oldid=966442" இலிருந்து மீள்விக்கப்பட்டது