பக்கம்:அருமையான துணை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



102

அருமையான துணை

கையில் இருந்த தட்டுமீது பாய்ந்தது. அந்தக் கை தான் செந்தியையும் இடுப்பில் வைத்துப் பற்றிக்கொண்டிருந்தது.

நாயின் பாய்ச்சல் வேகத்தையும் பற்களையும், அவ்வேளைய அதன் முகத் தோற்றத்தையும் கண்ட அம்மா அஞ்சி நடுங்கி, தட்டைச் சோற்றுடன் கீழே போட்டுவிட்டாள். நல்லவேளை, பிள்ளையை கீழே போடவில்லை. நாய் சோற்றைக் கவ்வத் திரும்பியது. என்றாலும், அதன் கால் நகம் செந்தியின் காலில் லேசாகப் பரண்டிவிட்டது. அது வெகுநேரம் எரிச்சல் தந்தது. நாயின் அந்நேரத்திய பயங்கரத் தோற்றமும் உறுமல் பாய்ச்சலும் செந்தியின் மன ஆழத்தில் பதிந்து விட்டன. பயம் வளர்த்தன. அந்தப் பயத்தை வளர்ப்பதாக அமைந்தன தொடந்து பெரியவர்கள் பேசிய பேச்சுக்கள்.

பையன்களோடு சேர்ந்து பள்ளிக்கூடத்துக்கோ அல்லது வேறு எங்கோ போகிறபோது, எவனுவது ஒரு வால்ப்பயல் கல்லை எடுத்து தெருவோடு போகிற நாய்மீது வீசுவான். கல்லெறிபட்ட நாய் ஒரு காலை நொண்டிக்கொண்டு, வாள் வாள் எனக் கத்தியபடி ஒடும். அது சிறுவர்களுக்கு வேடிக்கை ஆனால் செந்திக்குப் பயமாகத் தான் இருக்கும்.

அடிபட்ட நாய், அப்புறம் செந்தி தனியாகப் போகும் போது முறைக்கும். உர்ரென உறுமிக்கொண்டு ஒரமாக விலகிச் செல்லும், செந்தியின் பயம் அதிகரிக்கும். தானே தான் கல்லை அதன்மீது வீசியவன் என்று எண்ணி அந்த நாய் தன்மேல் விழுந்து பிடுங்குமோ என்று அவன் மனம் பதைக்கும்.

ஒருதடவை இரண்டு நாய்கள் வெறித்தனமாகச் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் கோபமும் கொதிப்பும் பற்களிலும் குரலிலும் வெளிப்பட்டன. அந்த வழியாகப் போக நேர்ந்த சிறுவன் செந்தி பயத்தால் நடுநடுங்கினான். யாரோ கல்லை வீசி நாய்களை விரட்டவும், திக்குக்கு ஒன்றாக அவை ஒடியபோது, ஒரு நாய் செந்தியின்மீது இடித்துக் கொண்டது. அது வேகமாக ஓடிவந்து மோதிய இடத்தில், அவன் காலில் வலி எடுத்தது. நாயின் மண்டை இடித்த இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/111&oldid=1306774" இலிருந்து மீள்விக்கப்பட்டது