பக்கம்:அருமையான துணை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பயம்

103

அது. அதைவிட அதிகமாக பயம் கவ்விப் பிடித்தது அவன் உள்ளத்தில். அந்த மிரட்சியில் அவனுக்கு ஜூரம்கூடக் கண்டு விட்டது.

அதிலிருந்து நாயிடம் உள்ளுற அவனுக்கு இருந்த பயமும் கனம்பெற்று வளர்ந்து அவனது அமைதியை குலைத்துக்கொண்டிருந்தது. அவன் பெரியவனாகி, அவனுக்குக் கல்யாணம் ஆகி, அவன் குடும்பத் தலைவனாய் இரண்டு மூன்று குழந்தைகளின் தந்தை ஆகிவிட்ட பின்னரும், செந்தியின் உள்ளத்தில் அந்தப் பயம் அரித்துத் தொந்தரவு கொடுப்பது மறையவுமில்லை; குறைந்துபோகவும் இல்லை. நாயைக் கண்டால் அவனுக்கு எப்போதும் பயம் தான்.

தெருவில் எங்காவது நாய் குரைக்கும் சத்தம் கேட்டாலே, இரவில் அவன் தூக்கம் கெட்டுப்போகும். ஏதாவது ஒரு தெருவில் வெறிநாய் அலைகிறது என்று கேள்விப் பட்டால் போதும்; அவன் அந்த வீதியின் பக்கமே போக மாட்டான். சுற்றி வளைத்து, சந்து பொத்துகளைக் கடந்து, போகவேண்டிய இடம் போவான்.

‘நாய் கடித்தால், அப்புறம் யார் படுறது? அதிலும், பைத்தியம் பிடித்த நாய்!' என்று முணுமுணுப்பான் செந்தி. செந்தி ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தான். தினம் ஒரு இரவு ஒன்பது மணிக்குமேல்தான் அவன் வீடு திரும்ப முடியும். சைக்கிளில்தான் போய்வந்தான். அப்படி சைக்கிளில் வரும்போது, மேலத் தெரு அருணாசலம் பிள்ளை வீட்டின் பெரிய நாயின் நினைப்பு அவனை உளம் நடுங்க வைக்கும்.

அது பெரிய நாய். கறுப்பாக, பார்ப்பதற்கே பிசாசு மாதிரி. அதன் கண்கள் வெறிபிடித்தவைபோல, என்னவோ தினுசாகக் கூர்ந்து நோக்கும். யாரைக் கண்டாலும் உறுமும். புதிதாக யாராவது தெருவோடு போனால், திண்ணேயில் படுத்துக்கிடக்கும் அந்த நாய் எழுந்து நின்று குரைக்கும். சைக்கிள் ஒட்டிச் செல்வோர் பேரில் அதற்கு ஒரு வெறுப்பு. குரைத்துக்கொண்டே சைக்கிளின் பின்னே ஒடும். சைக்கிள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/112&oldid=1306770" இலிருந்து மீள்விக்கப்பட்டது