பக்கம்:அருமையான துணை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பயம்

107

தெருவில் இரண்டு மூன்று பேரைக் கடித்துவிட்டு ஓடிவிட்டது என்றும்,அதை அடித்துக் கொல்வதற்காக ஏகப்பட்ட பேர் கைகளில் தடிக்கம்புகள் விறகுக்கட்டைகள் மண்வெட்டி கடப்பாறை சகிதம் சுற்றித் திரிகிறார்கள் என்றும் அவன் காதிலும் செய்தி விழுந்தது. அது அவன் மனக் குழப்பத்தை அதிகப்படுத்தியது.

பைத்தியம் பிடித்த நாய் மனிதர்கள் கையில் சிக்காமல் ஊருக்கு வெளியே கிழக்கே பார்த்து ஓடிவிட்டது என்றும் அவன் அன்று மாலை கேள்விப்பட்டான். அவனுக்கு இனம் புரிந்துகொள்ள முடியாத ஒரு பீதி உள்ளத்தில் கனத்தது.

அன்று வேலை கொஞ்சம் அதிகமாக இருந்தது. வீடு திரும்பும்போது மணி இரவு பத்து ஆகிவிட்டது. அன்று செந்தி சைக்கிள் எடுத்துச் செல்லவில்லை. சைக்கிளில் ஏதோ சிறு கோளாறு,

'நடந்துதானே போகிறோம்; மேலத்தெரு வழியாகவே போகலாம். கறுப்பு நாய் அநேகமாக திண்ணையில் இருக்காது’ என்று எண்ணிக்கொண்டு, அவன் அந்தத் தெரு வழியே நடந்தான்.

துரத்தில் வரும்போதே நாய் குரைக்கத் தொடங்கிவிட்டது.

'நாசமாப்போற நாய் இங்கேதான் கிடக்குதா?’ என்று அவன் மனம் முனகியது.

அவன் வேகமாக நடக்கலானான்.

தாய் திண்ணைமீது எழுந்து நின்று பலமாகக் குரைத்தது,ஊளையிட்டது.

அதனால் எரிச்சலுற்ற யாரோ, 'சீ சனியனே, சும்மா கிட, இல்லேன்னா வெளியே போய்த் தொலை' என்று கத்தினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/116&oldid=1304771" இலிருந்து மீள்விக்கப்பட்டது