பக்கம்:அருமையான துணை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அருமையான துணை


பார்த்துப் பார்த்து அலுத்துவிட்ட வெள்ளைச் சுவர்கள். அவற்றின்மீது தொங்கும் பழகிப்போன படங்கள். சுவர்களின் மூலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலாம்படை, அறையில் உள்ள பொருள்கள். எல்லாமே சலிப்பு ஏற்படுத்தின, படுத்த படுக்கையாய்க் கிடந்த புன்னைவனத்துக்கு.

சீக்காளியாகி விட்ட அவரைப் பார்ப்பதற்கென்று எப்போதாவது வந்த சொந்தக்காரர்கள்கூட அவருக்கு அலுப்பும் சலிப்புமே உண்டாக்குகிறார்கள். பெரியவர், பெயர் பெற்றவர். 'ரொம்ப பெரிய மனிதர்' என்ற நினைப்போடு வந்துபோன அவர்கள் ஒருவித பயமும் பக்தியும் கொண்டவர்களாக, அல்லது மதிப்பும் மரியாதையும் காட்டுகிறவர்களாக, நடந்துகொண்டார்கள். நோயாளியிடம் வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகளைக் கேட்டுக்கேட்டு, அவரவருக்குத் தோன்றும் யோசனைகளை அவர்கள் வறண்ட குரலில் சொல்வதை சகிப்புத் தன்மையோடு ஏற்று ஏற்று, புன்னைவனம் அலுத்துப்போயிருந்தார். அடிக்கடி எரிச்சலுற்றார், அதனால் சிடுசிடுத்தார்.

'சீக்கு யாருக்கும் வாறது தான். அதுக்காக இப்படியா நாய்க்குணம் பெறணும்?' என்று அவரைப் பார்க்க வந்து போனவர்கள் பேசிக் கொள்ளலானார்கள். வருவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார்கள்.

புன்னைவனம் விரும்பிய தனிமை அவருக்குக் கிடைத்தது. நாளாக ஆக அதுவே அழுத்தும் சுமைபோல் கனத்துக் கவிந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. முன்பு ஏன் இவ்வளவு பேர் நம்மைப் பார்க்க வருகிறார்கள்; அமைதியைக் கெடுக்கிறார்கள் என்று சிடுசிடுத்த அவர் மனம் இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/119&oldid=1318208" இலிருந்து மீள்விக்கப்பட்டது