பக்கம்:அருமையான துணை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰夏墨 அருமையான துணை பெரியவர் புன்னவனத்தின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, அவர் உள்ளத்துக்கு மகிழ்வளிக்கும் விதத்தில் செயல்புரியக்கூடியவர்கள் எவரும் இல்லை. வீட்டில் இருந்த வர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்தார்கள். அவருக்குத் தேவையான பணிவிடைகள் குறையின்றி, வேன் பிசகாது நிறைவேற்றப்பட்டன. வாய் திறந்து அவர் வெளியிடும் விருப்பங்கள் உடனுக்குடன் பூர்த்தி செய்ய்ப் பெற்றன. எனினும், குறிப்பறிந்து அவரது பெரும் குறையை நீக்கிவைக்கக்கூடிய திறமை மற்றவர்களுக்கு இல்லாமல் போயிற்று. சில சமயங்களில், இளையவர்களில் யாரையாவது அழைத்து அவர் பேச்சுக்கொடுப்பார். அவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் மாணவர்கள் மாதிரி, வேண்டா வெறுப்பாகவோ-கடமையே என்ருே முணமுணப் பார்கள். புத்தகம் எதையாவது எடுத்து உரக்கப் படிக்கு மாறு கோருவார். அவர்கள் கிழடுக்கு சும்மா கிடக்க முடியலே. சாகப்போற சமயத்திலும் புத்தக ஆசைதானு? நம்ம பிராணனை வாங்குது என்று புகைந்து குமைந்தவாறு, சுரத்தில்லாமல் படிப்பார்கள். இளையவர்களின் மனப்போக்கைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றிருந்த புன்னேவனம் அப்புறம் அவர்களே ஏவுவதை விட்டுவிட்டார். அவர்களும் அவர் இருந்த அறையின் பக்கம் தங்கள் நிழல்கூடப் படாதவாறு சிரத்தை யோடு கவனித்துக் கொண்டார்கள்: எனவே, சுவர்களையும் படங்களையும் பழகிய காட்சி களேயும் பார்த்து அலுப்புடன் கண்களை மூடிக்கொண்டு கிடப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆகிவிட்டது அவருக்கு. அப்போதும் புன்னவனம் சூழ்நிலை வெறுமையில் சவிப் புற்ற கண்களை மூடிக்கொண்டு கிடந்து பின் ஏதோ ஒரு குறு குறுப்பில் விழித்து, பார்வையை வாசலின் பக்கம் ஒட விட்டார். அங்கே ஒரு புதுமை பூத்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/121&oldid=738680" இலிருந்து மீள்விக்கப்பட்டது