பக்கம்:அருமையான துணை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமையான துனே Í Í 3 அவர் கண்கள் அப்பக்கம் பார்ப்பதைக் கண்ட ஒரு சிறு முகம் பின்வாங்கியது. பிறகு மெதுமெதுவாக எட்டிப் பார்த்தது. கருவண்டுக் கண்கள் உணர்வோடு மின்னின. 4

அந்த இடத்தில் சிறு சூ அவருக்குத் தோன்றியது. இது யார் குழந்தை? பிள்ளைகள் யாரும் வருவதில்லையே? அவர் மனம் அசித்து கொண்டது. ః "நான் வரலாமா?’ என்று மழலைக் குரலில் கேட்டு, பதிலுக்குக் காத்திராமலே உள்ளே வந்தாள், ஒரு சிறுமி. ஐந்து வயதிருக்கும். களேயான முகம், அலைபாயும் கண்கள். சிரிப்பு சதா குமிழிடும் ஊற்றுப் போன்ற சிறு வாய். அறை நடுவில் வந்து, கைகளேப் பின்னுல் கட்டியபடி நின்று, சுற்றிலும் நோக்கிளுள். அங்குமிங்கும் வண்ணப் பூச்சிகள்போல் பாய்ந்து திரிந்த விழிகள் புன்னேவனத்தின் மீது தேங்கி நின்றன.

  • நீ யாரு?" என்று கேட்டார் அவர்.

-உஷா என்று பெயரைச் சொன்குலே எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்ருெரு நம்பிக்கையோடு பேசுபவள்போல் திடமாக அறிவித்தாள் அந்தச் சிறுமி. உஷான்கு...? சந்திரசேகரன் மகளா? இந்தத் தெருவிலே மூன்ருவது வீட்டிலே. . . . அவர் பேச்சு அநாவசியமானதாகத் தோன்றியது அவளுக்கு சிறு எரிச்சல் தொனிக்கக் கூறினுள்: நான்தான் உஷா, என் பேரு உஷா. உஷான்னு சொன்னப்புறமும் சும்மா புழுபுழுங்கிறியே!” அந்தக் குழந்தையின் தன்னம்பிக்கையும் தைரியமும் அவருக்கு வியப்பனித்தன. ஏதோ பலிபீடத்தின் முன் வந்து அச்சத்தோடு தலைவணங்கி நிற்பவர்கள் போலவும், வரம் தரும் தெய்வத்தின் திருமுன்னிலையில் பக்தியும் பணிவும் காட்டுவது போலவும், வந்து மதிப்பும் மரியாதையும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/122&oldid=738681" இலிருந்து மீள்விக்கப்பட்டது