பக்கம்:அருமையான துணை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ அருமையான துணை if نهيبيه பெரூசா, ரொம்ப பெரூசா, ஆன மாதிரி, பனை மரம் மாதிரி. . . புள்ளெகளே எல்லாம் மிரட்டும்படியா... இந்தாத்தண்டி மூஞ்சி. இம்மாம் பெரிய மீசை, முண்டக் கண்ணு. ஏய் எங்கே வந்தே சீ ஒடிப்போ, அடிப்பேன் உதைப்பேன்னு பேசிக்கிட்டு, அப்படியெல்லாம் இருக்கும். உன்னைப்போலெயா இருக்கும்? ஏஹே, பெரிய ஆளுன்னு எல்லோரும் பேசிப் பயப்படுற ஆளை நீ பார்த்ததேயில்லை போலிருக்கு: என்று, உரிய நடிப்புகள், தொடிப்புகள், கண் உருட்டல்கள், கைச் சைகைகளோடு சொல்லி முடித்தாள் மிகவும் ரசிக்க வேண்டிய காட்சியாகத்தான் இருந்தது அது எனக்குத் தெரியாதம்மா. அப்படியாப்பட்ட ஆளே நான் பார்த்ததேயில்லை என்று அவர் தெரிவித்தார். r அப்போ உனக்கு இந்த வீடு இல்லையா? நீ இந்த வீட்டுக் x த்தது கிடையாதா?’ என்று ஆச்சரியத்தோடு விசாரித்தாள் சிறுமி. 3. ஹஅங்! நான் எங்கே போறேன், வாறேன்! இந்த அறையிலேயே, இந்தக் கட்டிவிலேயேதான் இருக்கேன்..." அய்யய்யோ! உனக்கு எப்படிப் பொழுது போகுது? விளையாடதுக்கு யாராவது வருவாங்களா?' என்று அனு தாபத்தோடு, அக்கறையோடு கேட்டாள் உஷா. அவளது முக மாறுதல்களும் குரல் ஏற்ற இறக்கங்களும் அவருக்கு இனிய விருந்தாக அமைந்தன. இது சுவாரஸ்ய மான குழந்தைதான் என்று அவர் மனம் வியந்தது. 'ஹல்ம்ப் யாரு வாரு? இந்தக் கிழவனேடு பேசிப் பொழுதுபோக்க யாருக்குப் பிடிக்கும்! இயல்பான அலுப்பு வெளிப்பட்டது அவர் பேச்சில், நான் வாரேன் தாத்தா. நான் தொந்தரவு பண்ண மாட்டேன். அந்தச் சன்னல்கிட்டே உக்காந்து விளையாடிக் கிட்டிருப்பேன். நீயா பேசணும்னு நெனச்சாப் பேசு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/124&oldid=738683" இலிருந்து மீள்விக்கப்பட்டது