பக்கம்:அருமையான துணை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமையான துனே 121 என்னது? கையிலே என்ன வச்சிருக்கே?' என்று அவர் கேட்டும் பயனில்லை. வாயை ஆலெனத் திறந்தார். அவள் கையிலிருந்ததை அவர் வாய்க்குள் போட்டுவிட்டுக் கலீரிட்டுச் சிரித்தாள். குதித்தாள். அவர் வாயில் இனிப்பு. மனசில் கிளுகிளுப்பு. இந்த மிட்டாய்க்குத்தான இந்தக் குதியாட்டம் என்ருச். 'இது ஏன் தெரியுமா? இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள். ஆமா!' என்று உஷா உற்சாகத்தோடு சொன்னுள். பார்த்தையா, புதுச்சட்டை, தலையிலே புது ரிப்பன். இன்று நான் புது உஷா என்று குது.ாகலித்தாள். அடடே, எனக்குத் தெரியாமல் போச்சே! நேத்தே சொல்லியிருக்கப்படாது? உஷா அவர் பேச்சைப் பெரிதுபடுத்தவில்லை. உனக்கு இன்னொரு மிட்டாய் வேனுமா? இதோ வச்சிருக்கேன்' என்று பெருமையாக எடுத்துக்காட்டினுள். வேண்டாம் வேண்டாம். நீயே தின்னு. உனக்கு இன்னும் மிட்டாய் வேணுமின்ன காசு தாறேன். வாங்கிக்கோ. * அவள் மறுத்துவிட்டாள். வழக்கம் போல் பேசினுள். விளையாடினுள். போளுள், அன்று மாலை உஷாவின் தந்தையிடம் ஒரு ஆள் வந்து, 'உங்களை பெரிய வீட்டு ஐயா இட்டு வரச் சொன்னங்க' என்று தெரிவிக்கவும், அவர் திகைப்படைந்தார். ஏன்? என்ன விஷயம்?’ எனக் கேட்டார். எனக்குத் தெரியாது. என்னமோ உங்க குழந்தை விஷயமாகத்தானிருக்கும் என்று அவன் சொல்ல, அவர் திகிலுற்ருர். ஏ. சரசு, உஷா அங்கே போயி ஏதாவது விஷமம் பண்ணிட்டு வந்துதா?’ என்று மனைவியிடம் விசாரித் தார். அவளோ எனக்கென்ன தெரியும்! என்று நீட்டினுள். அவ்வேளையில் அங்கே நுழைந்த உஷாவை இழுத்து, "ஏட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/130&oldid=738690" இலிருந்து மீள்விக்கப்பட்டது