பக்கம்:அருமையான துணை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருமையான துணை

14

கடுமையால் பாதிக்கப்படும் அனைவருக்காகவும் இதயவலி அனுபவிப்பது உண்டு.

அழகிகளைப் பார்த்தும் அவன் அனுதாபம் கொண்டான். அதை அறிந்த்ததும்தான் அவனுடைய நண்பர்கள் அவனுக்கு 'சம்திங் இஸ் ராங் ஸம்வேர்' 'மூளையில் ஏதோ கோளாறு' என்றும், 'அவன் மைண்டே கோளாறானதுதான்' 'சைக்கலாஜிக்கலி தேர் இஸ் ஸம்திங் ராங் வித் ஹிம்' எனவும் தாராளமாக ஸ்ர்டிபிகேட் வழங்கினர்கள்.

அழகாக விளங்குகிற பெண்ணைப் பார்த்து, அவளது எழில் அம்சங்களே ரசித்து மகிழ்வதற்குப் பதிலாக:

அவன் பட்டினத்தார்த்தனம் பண்ணுவானோ-அது சீழ்க்கட்டி, இது தசை, இது உதிரம், இது அருவருக்கப்பட வேண்டிய குழி எனப் புலம்புவானோ-என்று கேட்டால்,

அப்படிச் செய்தாலாவது பரவாயில்லை; ஒரு வேதாந்தப் பித்து, சாமியார்ப் பைத்தியம் என்று கருதலாமே என நண்பர்கள் குறிப்பிடுவார்கள்.

அவன் விஷயமே வேறு. ஒரு அழகி சிங்காரித்துக் கொண்டோ, சிங்காரிக்காமலோ, சிரித்த முகமும் சீதேவியுமாக அவன் கண்ணில் படுகிறபோது, அவன் உள்ளம் அனுதாபத்தால் அழுது வழியும். பருவ வயசில் அவளைப் போலவும் அவளை விடவும் அழகாக விளங்கிய சில பெண்கள், இரண்டு மூன்று வருட காலத்திலேயே வாடி வதங்கி, அழகு குலைந்து ஒட்டி உலர்ந்து வெகுளிகள் மாதிரி ஆகிவிட்டது அவன் நினைவில் தோன்றும். அவன் கண்ணெதிரே - பளபளவெனத் துலக்கப் பெற்று, பூவிட்டுப் பொட்டுமிடப்பட்ட குத்து விளக்குப்போல் காட்சி அளிக்கிற பெண்ணும் வாழ்க்கைத் தீயில் கருகி வதக்கப்பட்டு எப்படி எப்படியோ மாறிப்போவாளே என்ற எண்ணமும், அவள் அவ்வாறு கோரமாய், கண்ணறாவியாய் நிற்கிற தோற்றமும்தான் அவனுள் பளிச்சிடும். அதற்காகவே அவள் உள்ளம் மோனத்துயர் சிந்தி அனுதாபப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/23&oldid=966791" இலிருந்து மீள்விக்கப்பட்டது