பக்கம்:அருமையான துணை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுதாபம்

15


இதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது அவன் தவறா? இல்லை, அவர்கள் தவறு என்றுதான் எப்படிச் சொல்லமுடியும்?

அவசியம் இல்லாததற்கெல்லாம் அவன் அனுதாபம் கொண்டு வருந்தினான். அவனது அனுதாபத்துக்கு இலக்கானவர்கள் தங்கள் நிலை குறித்து ஒருநாள் ஒரு பொழுதுகூட.. வருத்தப்படுவதில்லை என்பது அவனுக்கே தெரியும்.

வறுமையினால் பசிக்கொடுமையால், தங்கள் உடலை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தும் பெண்களுக்காக அவன் நியாயமான அனுதாபம் வளர்த்தான். அதேபோல, ஸ்டைலாக, நாகரிகப் பகட்டுகளோடு, ஜாலியாக நாளோட்டுவதற்குத் தங்கள் உடலையும் கவர்ச்சியையும் பயன்படுத்தத் தயங்காத கல்லூரிக் குமரிகள், உத்தியோக மகளிர், சமூகப் பெண்கள் வகையறாவுக்காகவும், அரசியல் உலகில்-பொது வாழ்வில்-கலைத்துறையில் முன்னேறிப் புகழ்பெறும் நோக்கத்தோடு தங்கள் உடலை முதலாகவும் ஏணியாகவும் துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்தக் கூசாத துணிச்சல்காரிகளுக்காகவும், அவர்களது போக்குகளுக்காகவும் அவன் வருத்தப்பட்டு அனுதாபம்கொள்வது வழக்கம்.

உல்லாச வாழ்வு வாழும் மேல் மினுக்கிகளும் சிங்காரிகளும் தங்கள் வாழ்க்கை முறையை வெற்றிப் பாதை என்று கருதுகிறார்களேயொழிய, இப்படியும் வாழ வேண்டியிருக் கிறதே என்று கவலைப்படவா செய்கிறார்கள்?

மனம் குமையும் அந்த அப்பாவிதான், 'சே, இதெல்லாம் ஏன் இப்படி இருக்கு மனித வாழ்க்கை எதற்காக இவ்வாறு அமைந்திருக்கு? இந்த உலகத்தில் எதுவுமே சரியாக இல்லேன்னுதான் தோணுது' என்று குமுறுவான், அவன் மனமும் அடிக்கடி புலம்பும்.

பெரிய ஆறுகள் பொங்கிப் பிரவாசித்து ஊர்களே நாச மாக்கின; மனிதர்களைச் சாகடித்தன... மனிதர்கள் சமரிட்டுச் செத்து விழுகிறார்கள். பிள்ளைகள் சாகடிக்கப்படுகின்றன. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/24&oldid=967356" இலிருந்து மீள்விக்கப்பட்டது