பக்கம்:அருமையான துணை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புத்திசாலி

பார்க்கும் போதே தெரியுதே அவன் புத்திசாலி என்று:இப்படிச் சிலர் சொன்னார்கள்.

அவன் மூஞ்சியைப் பார்த்தாலே சரியான முட்டாள் என்று தெரிகிறதே!-இவ்வாறு சிலர் தெரிவித்தார்கள்.

புத்திசாலி மாதிரிக் காட்சி அளிக்கும் மடையன் என்று வேறு சிலர் சொன்னார்கள்.

வெவ்வேறு நபர்களுக்கு அவரவர் நோக்குக்கு ஏற்றபடி தோற்றம் காட்டிய சுயம்புலிங்கம் மற்றவர்களுடைய அபிப்பிராயங்கள் குறித்துக் கவலை கொண்டானில்லை. அவன் கவலைப்படுவதற்கு வேறு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன.

மற்றவர்களைப் பற்றி, மனிதர்கள், சமூகம், நாடு, உலகம், வாழ்க்கை முதலிய அனைத்தையும் பற்றி அவன் தனி அபிப்பிராயங்களை வளர்த்து வந்தான்.

இப்படி எண்ணங்களை வளர்த்து வருவோரில் பலருக்கு இருப்பது போலவே அவனுக்கும் திடமான கருத்துக்களும் நோக்கங்களும் லட்சியங்களும் இருந்தன.

இந்த உலகம் இருக்கிறதே, அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. சமூகமும் நாடும் மிக மோசமான நிலையில் உள்ளன. மனிதர்களின் பேச்சிலே சத்தியம் இல்லை. அவர்களது செயலில் சத்தியம் இல்லை. நாட்டினரின் கொள்கைகளில், போக்குகளில், நடவடிக்கைகளில் சத்தியம் இல்லை. ’சத்தியமேவ ஜெயதே’ என்கிற சுலோகத்தின் எழுத்துக்களில் தவிர வேறு எங்கும் எதிலும் சத்தியம் இல்லவே இல்லை. இதை எடுத்துச் சொல்லும் ஒன்றிரு குரல்கள் பெருங்கூச்சலில் அமுங்கி விடுகின்றன. ஆகவே, பலர் மவுனமாகவே இருந்து விடுகிறார்கள். நாமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/28&oldid=968938" இலிருந்து மீள்விக்கப்பட்டது