பக்கம்:அருமையான துணை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அருமையான துணை



பத்திரிகை தொடங்கும் முன்பு அரைப் பட்டினி ஆசாமி போல் தோன்றிய அவன் பத்திரிகை நின்றபோது ‘கஞ்சிக்கு இல்லாதவன்' போல் காட்சி அளித்தான். இப்போது பெரும் பஞ்சத்தில் அடிபட்ட நித்திய தரித்திரன்போல் மாறியிருந்தான்.

அவனைப் பார்த்தவர்களுக்கு இப்போது தயக்கம் ஏற்படவேயில்லை. அவன் சரியான முட்டாள் என்று ஒங்கி அடித்துச் சொன்னார்கள்.

ஒருநாள் அவன் புத்தக வெளியீட்டகத்தையும் இழுத்து மூடிவிட்டு எங்கோ போய் மறைந்தான்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு, சுயம்புலிங்கத்தைப் பற்றி எல்லோரும் பேசலானார்கள். வியப்புத்தான் பல குரல்களின் ஒரே தொனியாக அமைந்தது.

சுயம்புலிங்கம் ‘ஆள் அடையாளமே தெரியாதபடி மாறிப் போனான்' என்று சொன்னர்கள். பழைய ‘அரிசி அப்பளாம்' தோற்றம் இல்லை. உளுத்தங்களி உருண்டை மேலே எண்ணெய் தடவி, பெரிதாகத் திரட்டப்பட்டது போல் மினுமினுப்புடன் இருக்கிறான் என்று ஒருவர் சொன்னார். ‘தொந்தி போட்டு, குட்டி முதலாளி கணக்கா... எப்படி இருக்கான்கிறீர்!’ என்றார் ஒருவர்.

‘நாம் அப்பவே சொல்லலியா? அவன் சரியான புத்திசாலிதான்' என்று பலரும் சொன்னார்கள்.

அவனைச் சந்திப்பதற்காகவே ஒவ்வொருவரும் பக்கத்துக்கு நகரத்துக்குப் போய் வந்தார்கள்.

உண்மைதான். சுயம்புலிங்கம் ரொம்பவும் முன்னேறிவிட்டான். உலகத்தைப் புரிந்துகொண்டு, நாட்டினரின் தேவையைப் பூர்த்தி செய்யும் சாமர்த்தியசாலியாக வளர்ந்தான். வாரிவிடாத கிராப்பும், கண்ணாடி அணிந்த முகமும், தொளதொளத்த ஜிப்பாவுமாக, புத்திசாலிக்களேயோடு அவன் ஜம்.மென்று கொலுவிருந்தான் ‘திருவள்ளுவர் பார்மஸி'யில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/31&oldid=970567" இலிருந்து மீள்விக்கப்பட்டது