பக்கம்:அருமையான துணை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உருப்படாத பயல்

சொக்குப் பயல் தானே! அவன் எங்கே உருப்படப் போறான்?

சொக்கையா என்கிற சொக்கலிங்கம் பற்றி அவனது ஊர்க்காரர்கள் கொண்டிருந்த மேலான அபிப்பிராயம் இது.

‘சவத்தைப் போச்சொல்லு சவத்தை! தனக்காகவும் தெரியாது, மத்தவங்க சொனனாலும் புத்தியிலே ஏறாது: வெறும் புத்திகெட்ட கழுதை!'

சொக்கையாவின் அக்காக்காரிகளும், பெரியம்மா, சின்னம்மா, அத்தை என்று ஏதேதே உறவுமுறை கொண்ட அம்மாளுகளும் அடிக்கடி உதிர்த்த பொன்மொழிகள் இவை.

அவனுக்கு அந்த ஊரில் உறவுக்காரர்களுக்குப் பஞ்சம் இல்லை. வயிற்றுப் பாட்டுக்குத்தான் சிரமம்.

அவன் தந்தை சிவசிதம்பரம் பிள்ளை இறந்த நாளிலிருந்தே சிரமம் கவியத் தொடங்கி விட்டது என்று சொல்ல வேண்டும். அவர் செத்தும் ஏழெட்டு வருடங்கள் ஒடிவிட்டன.

பிள்ளைவாள் உயிரோடு இருந்த காலத்தில் அந்த வீட்டில் பாலும், மோரும், சோறும் பாயசமும் தாராளமாகப் புழங்கிவந்தன என்று எண்ணவேண்டியதில்லை. அவர் என்ன என்னவோ செய்து-அவரே சொல்லிக்கொண்டபடி, ‘யானையைத் தூக்கிப் பானையிலே போட்டு, பானையை எடுத்துச் சட்டியிலே போட்டு' - ஒரு மாதிரியாக் காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தார். அங்கும் இங்கும் பாடுபட்டார். கடனைக் கிடனை வாங்கி ஒவ்வொரு நாளையும் ஒப்பேத்தினார். பொதுவாக மத்தியதரத்துக் குடும்பத்தினர் செய்கிற எல்லாச் சித்து வேலைகளையும் செய்து, ‘மேனித்தா வாழ்கிற மாதிரி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/34&oldid=970609" இலிருந்து மீள்விக்கப்பட்டது