பக்கம்:அருமையான துணை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருப்படாத பயல்

27

அக்கறையாகப் படித்தான். எஸ். எஸ். எல். சி. பாஸ் செய்தான். வேலைக்காக அலைந்து திரிந்தான். காத்திருந்தான்.

அந்த வீட்டுச் சோற்றை நாயும் தின்னு, பேயும் விளையாடக்கூடிய வளமான நாட்களைக் கண்டு அனுபவிக்கக் காத்திராமலே விசாலாட்சி அம்மாள் ஒருநாள் மண்டையைப் போட்டாள்.

சொக்கையா அரைவயிறும் கால்வயிறுமாக நாளோட்ட நேர்ந்த காலங்களில் பல விஷயங்களைப்பற்றியும் சிந்தித்துச் சில முடிவுகளுக்கு வந்திருந்தான்.

அதில் ஒன்று இந்த மத்தியதர வர்க்கத்துப் பேர்வழிகள் ஜம்பத்துக்கென்றும், சம்பிரதாயம் என்றும், உருப்படாத பயல்முன்னோர்கள் செய்த வழக்கம், அதனால் நாமும் செய்தாக வேண்டும்: என்றும் இன்னும் பல காரணங்களைச் சொல்லியும் வாழ்க்கையில் வீண் தெண்டச் செலவுகளைப் பெருக்கி வருகிறார்கள்.

கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது உருப்படாத பயல்செய்யும் கட்டுகளைச் செய்தே ஆகணும்' என்று பிடிவாதமாகச் செய்து, தங்களையும் தங்கள் குடும்பங்களையும் சிறுகச் சிறுகச் சீரழித்துக்கொண்டு, திணறித் திண்டாடுகிறார்கள். பெண் ‘பெரிய மனுவி' ஆகிவிட்டாள் என்று பெருமையாகப் பெரிய அளவில் விசேஷம் நடத்துவது முதல், கல்யாணம் காடேற்று கருமாதி என்று ஊரைக்கூட்டி வாய்க்கு ருசியாகச் சோறு ஆக்கிப் போடுவதிலும் பிற வழிகளிலும் அநாவசியமாகப் பணத்தைக் காலியாக்குவதில் உற்சாகம் காட்டுகிறார்கள்.

அப்புறம் கையிலே பணம் இல்லையே, கடன் வளர்ந்து விட்டதே என்று கவலை வளர்க்கிறார்கள். வாழமுடியாத நிலையில் திணறிக்கொண்டிருப்பவர்கள், தாங்களும் வாழத் தெரியாமல் தங்களை நம்பியிருப்பவர்களையும் வாழ விடாமல்-வாழ வகை செய்யாமல்-நாசமாய்ப் போகிறார்கள். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/36&oldid=970612" இலிருந்து மீள்விக்கப்பட்டது