பக்கம்:அருமையான துணை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருப்படாத பயல்

29

அவரவர் செளகரியப்படி-செய்துமுடிப்பதில் ஆர்வம் காட்டப்படுகிற ′கருமாதி விசேஷ'த்தை, அது வேண்டியதில்லை, தேவை இல்லாத தெண்ட வேலை. பணத்தாசை பிடித்தவர்களின் ஏற்பாடு அது. பணம் மிகுந்தவர்கள் தங்கள் மன அரிப்பை சாந்தி செய்வதற்காக நடத்துவது. அதை நடத்தாமல் விட்டுவிடுவதனால் ஒன்றும் கெட்டுவிடாது' என்று சொல்லி நிறுத்திவிட்டான். அவனைப்பற்றி உறவினரும் ஊர்க்காரர்களும் தங்கள் மனம் போனபடி கதைப்பதில் இன்பம் கண்டார்கள்.

யார் என்ன பேசினால் எனக்கென்ன! பிறரது சிரிப்பான வார்த்தைகளோ, சீற்றமான பேச்சுகளோ, பழிப்புகளோ, பாராட்டுகளோ எனக்குச் சோறு கொண்டுவந்து விடப் போவதில்லை, என் தேவைகளை நிறைவேற்றும் சக்தி அவைகளுக்கு கிடையா. நானே உழைத்துப் பாடுபட்டால்தான் எனக்குக் காசுகள் கிடைக்கும், சாப்பாடு கிடைக்க வழியும் பிறக்கும்' என்று அவன் சொல்வது வழக்கம்.

மாதச் சம்பளம் கிடைக்கும் வேலை என்ன எளிதில் கிடைத்துவிடுகிறதா?போதிய சிபாரிசுகள் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கொடுக்க வேண்டியவற்றை கொடுத்தல்கள் முதலிய எத்தனையோ வேலைப்பாடுகள் நடந்தாக வேண்டுமே! அப்பாவி சொக்கலிங்கம் அதுக்கெல்லாம் எங்கே போவான்? 'ஆனாலும் அவன் சோர்வடையவில்லை. எந்த வேலை யானால் என்ன? மனசுக்குப் பிடிக்கிற நல்ல வேலை வருகிற போது வரட்டும். அல்லது வராமலே போகட்டும். அதுக்காக காய்ஞ்சுக்கிட்டுக் கிடக்க முடியுமா' என்று எண்ணினன். டவுனில் ஒரு ஒட்டலில் செர்வராகச் சேர்ந்து உழைக்க முற்படடான்.

உண்மை அறிந்த ஊர்க்காரர்கள் அவனை ஏசினர்கள். ஊரின் அம்மாக்கமாருகளும் அக்காக்காரிகளும் 'நம்ம குலப் பெருமை என்ன! குடும்ப கவுரவம் என்ன! அவன் தாத்தா வுக்கு இருந்த மதிப்பு என்ன! இந்தச் சின்னச் சவம் எல்லார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/38&oldid=982658" இலிருந்து மீள்விக்கப்பட்டது