பக்கம்:அருமையான துணை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அருமையான துணை


அவனைப் போன்றவர்கள் கூடி சும்மாயிருந்து சுவையாக வம்பளத்து சோம்பலாகக் காலக் கொலை செய்கிற இடங்களில் எல்லாம் அவனும் ஆஜராகி விடுவான். அவர்களோடு சேர்ந்து ஊர்க்கதைகள் பேசிக் களிப்பான். வேண்டியவர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்குப் போவான். அதையும் இதையும் பேசிப் பொழுது போக்குவான்.

இப்படியாக அவனுக்குச் சுவையான விஷயங்கள் சேர்ந்து விடும்.

அது பட்டிக்காடும் இல்லாத, பட்டணக்கரையும் இல்லாத ஒரு சுமாரான ஊர். எதுவும் செய்யாமல், முன்னோர்கள் தேடிவைத்த சொத்தை வைத்துக்கொண்டு, சோம்பேறித்தனமாக ’சுகஜீவனம்’ என்ற பெயரில் நாளோட்ட, வாழ்ந்த மத்தியதர வர்க்கத்தினர் கணிசமாக இருந்தார்கள். உண்பதும், உறங்குவதும், ஊர்வம்பு பேசிக் களிப்பதும்தான் அவர்களுடைய வாழ்க்கை நியதியாக இருந்தது.

எதிரே இருக்கிறபோது ஒருவனை புகழ்ந்தும் வியந்தும் பேசுவார்கள். அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டால், இனிக்கப் பேசிய அவனையே பேச்சால் குதறி எடுத்துப்பிய்த்து விளாசுவதில் தனி இன்பம் காண்பது அவ்வூராரின் இயல்பு.பொதுவாக எவனைப்பற்றியும் எவருக்கும் நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆளை நேரில் காண்கிறபோது நல்லவன் ஆக மதிக்கப்படுகிறவன், பின்னால் வெறும்பயல், அல்பன், சின்னப்பயல், உருப்படாத பயல் என்ற நிலைக்கு இறங்கிவிடுவான்.

சிவன் அணைந்த பெருமாளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ’ஒரு கடைச் செங்கல்லும் பிடாரி' என்பதுபோல,ஒருங்குகூடிய ஓரினப் பறவைகள் போல, அவ்வூர்வாசிகள் எல்லோரும் ஓர் நிறை, ஒரு நோக்கு, ஒரே போக்கு உடையவர்களாகத்தான் வ ள ர் ந் து வாழ்ந்தார்கள். அணைந்த பெருமாள் மட்டும் தனிவழி போக முடியுமா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/43&oldid=1242892" இலிருந்து மீள்விக்கப்பட்டது