பக்கம்:அருமையான துணை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

அருமையான துணை

மெதுவாகச் சொன்னான். வயசு ஆனா என்ன அண்ணாச்சி? கல்யாணம்னு ஒண்னு ஆனால்தான எல்லாம்! அந்தப் பொண்ணு அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவிச்சுக்கிட்டுத்தான் இருக்கு!’

‘அது என்னய்யா விஷயம்?’ என்று சுவாரஸ்யமாக விசாரித்தார் மற்றவர்.

‘உங்களுக்குத் தெரியாதா? பக்கத்து வீட்டிலே ஒரு பையன் இருக்கான், ரொம்ப ஸ்டைல் மாஸ்டர். எங்கேயோ ஒரு ஆபிசிலே கிளார்க் வேலை பார்க்கிறான். நீங்க கூடப் பார்த்திருக்கலாம் அவனே. சைக்கிளில் போயிட்டுப் போயிட்டு வருவான். அவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் காதல். வேண்டியதெல்லாம் ஒழுங்க நடந்துக்கிட்டு இருக்குது’.

‘அப்படியா! அப்படியா?’ என்று அதிசயித்தார்; சந்தேகம் தொனிக்கவும் கேட்டார் அண்ணாச்சி.


‘நான் சும்மாவா சொல்றேன்? பல பேருக்கும் தொிஞ்ச ரகசியமாக்சே, அந்தப் பெண்ணும் இன்னொண்னும் சினிமாவுக்குப் போகும். தியேட்டர்லே வந்து ரெடியா நிற்பான் ஸ்டைல் மாஸ்டர். இன்னெரு புள்ளைக்கும் ஜோடி சேர ஒரு பையன் உண்டு. ஜாலியா சினிமா பார்ப்பாங்க. ஒரு நாள் இதை நேரிலே பார்த்த ஒருத்தர்தான் என் கிட்டச் சொன்னாரு!’ என்று அணஞ்ச பெருமாள் அடித்துச் சொன்னுன்,

‘அட அப்படியா! இது மாதிரியும் நடக்குதா!’

இதிலே என்ன அதிசயம் இருக்கு அண்ணாச்சி? இதெல்லாம் இப்போ சகஜம். சின்ன ஊர்களிலும், பெரிய ஊர்களிலும், டவுன் ஸைடிலேயும் நடக்கிறதைப் பார்த்தால் நாமெல்லாம் அசந்து போக வேண்டியதுதான். ரோடிலே நடந்துபோக நியாயமில்லே. பொம்பளைகளும், சின்னப் பொண்ணுகளும் எதிரே வந்தால், விலகி வழி விடுகிறதே கிடையாது. இடிச்சுக்கிட்டுத்தான் போறது, வர்றது. சினிமா பார்த்துவிட்டு வரும் போதும் ஆண்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/45&oldid=1322905" இலிருந்து மீள்விக்கப்பட்டது