பக்கம்:அருமையான துணை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணைந்த பெருமாளின் மனமகிழ்ச்சி

37

இடிச்சு மோதிக்கிட்டுத்தான் வாருங்க. அதுக்காகத்தான் அவங்க சினிமாவுக்கே போருங்க. சினிமா முடிஞ்ச பிறகு ஓட்டல், லாட்ஜ்னு தேடிப்போக வேண்டியதுதான். உங்களுக்குத் தெரியுமா, இப்போதெல்லாம் லாட்ஜ்கள் எப்பவும் ஃபுல்தான். இதுமாதிரி ஜோடிகள்தான் வந்து மொய்க்குதே. சாதாரணமானவங்களுக்கு ரூம் கிடைக்கிறதே சிரமமாக இருக்கு. அணைந்த பெருமாள் இந்த விஷயத்தில் ஒரு ‘அத்தாரிட்’டி மாதிரி உறுதியாகப் பேசினான்.

“அது சரி. வெயிலுப்பிள்ளைவாள் மகள் வந்து ...” என்று இழுத்தார் நாவன்னா,

‘அம்மையைப்போல் தானே இருக்கும்! அவள் கீர்த்திப் பிரதாபம் ஊரறிஞ்ச விஷயம் இல்லையா?’ என்று கூறிச் சிரித்தான் அனந்த பெருமாள்.

இந்த ரீதியில் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அவன். தெரு முனையில் குழைக்காதர் அவனைக் கண்டு கும்பிடுபோட்டான்,

மகரநெடும் குழைக்காதர் என்பது ஒரு பகவானின் திருநாமம். இந்த நெடும் பெயருடையார் சிலர் உண்டு. வெறும் ‘குழைக்காதர்’ என்து பெயரை குறுக்கிக்கொள் வோரும் உண்டு. .

‘என்னவே, நாயன்னா ரொம்ப நேரமாப் பேசிக்கிட்டிருந் தாரே, என்ன சமாச்சாரம்?’ என்று அவன் விசாரித்தான்.

‘சவத்துப் பயலுக்கு வேலை என்ன! வண்டி மறிச்சான் மாதிரி தெருவிலே நின்னுக்கிட்டு, போறவன் வாறவனை எல்லாம் வழிமறிச்சு, அது என்ன-இது ஏன்-அவன் எப்படிஇவள் இப்படின்னு தொன தொணத்திடுவான் ஐயா. ஊரிலே எங்கே கல்யாணம் வருது, யார் வீட்டிலே புள்ளை பொறந்ததுன்னு விசாரிச்சுத் தெரியலேன்னு சொன்னா, அவனுக்குத் தலை வெடிச்சிடும். பெண்டாட்டிக்குப் பயந்த பயல்!’ என்று அணைந்த பெருமாள் அடித்து விளாசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/46&oldid=1322901" இலிருந்து மீள்விக்கப்பட்டது