பக்கம்:அருமையான துணை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணேந்த பெருமாளின் மனமகிழ்ச்சி 3 # விளேயாடி, புருசன் இல்லாத குறையை போக்கடிச்சுக் கிட்டா,’ வேண்டியது தானே என வழிமொழிந்தான்’ நண்பன். இவ்வாறு பேசி, இவ்வேனேக்கு இவ்வளவு போதும் என்று இருவருக்கும் திருப்தி ஏற்பட்டதும், அவர்கள் பிரிந்து போனுர்கள், அணைந்த பெருமாளுக்கு மகிழ்வண்ண நாதன் என்ருெரு நண்பன். அவன் வீட்டில் போய் இவன் பேசியும் துரங்கியும் பொழுது போக்குவது வழக்கம். உமையொருபாகன், திருப்பாற்கடல்நம்பி, பன்னிருகைப் பெருமாள் என்று இன்னும் சிலரும் வந்து சேர்வார்கள். அந்த வீடு ஒரு மடம் மாதிரி. மகிழ்வண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் பெரியவர்கள் யாரும் கிடையாது. எனவே அவர்கள் சோம்பேறித்தன மாகப் பொழுதுபோக்குவதற்கு ரொம்ப வசதியான இடம் శ్రీ • - அவர்கள் எப்போதும் பொம்பிளைகளைப் பற்றித்தான் பேசி மகிழ்ந்தார்கள். அணேந்த பெருமாள் தான் அதிகம் பேசுவது வழக்கம். அந்த ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த பெண்களைப்பற்றி-தாலியறுத்தவள், வாழ்வரசி, கல்யாணம் ஆகாதிருந்தவள், வாழாவெட்டியாக இருப்பவள் பற்றி எல்லாம் விவரங்களோடு பேசுவான். அந்த ஊரில் எவளுமே ஒழுங்கானவள் இல்லை என்ற முடிவுக்கே வர நேரிடும் அவன் பேச்சைக் கேட்கிறவர்களுக்கு. அதைக் குறிப்பிட்டுக் கேட்டால், இந்த ஊரில் மட்டுமா! எல்லா இடங்களிலுமே பொம்பிளேகள் அப்படித் தான் இருக்கிருங்க. தெருவிலே நடந்துபோகிற ஆண் பிள்ளைகளை இடிச்சுக்கிட்டு அலைகிறவங்க முழிக்கிற முழியே இதைக் காட்டிக்கொடுக்குமே என்ற ரீதியில் அவன் பேசுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/48&oldid=738731" இலிருந்து மீள்விக்கப்பட்டது