பக்கம்:அருமையான துணை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

சிறுகதைகள் எத்தனை எத்தனையோ விதங்களில் எழுதப்பட்டுள்ளன-எழுதப்படுகின்றன. சொல்லும் முறையிலும், உத்திகள் வகையிலும் அவை பலவிதத் தன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆயினும் அவை வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாக, மனிதரின் இயல்புகள் போக்குகள் உணர்ச்சிகளைச் சித்தரிப்பனவாகவே அமைகின்றன. பெரும் பாலும்.

வாழ்க்கை விரிவானது. ஆழமானது. பன்முகத் தோற்றம்கொண்டது. புரிந்துகொள்வதற்கு எளிதாக இருப்பதுபோல் தோற்றம் காட்டினும் கலபத்தில் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருப்பது.

மனிதர்களும் ரகம் ரகமானவர்கள். எப்படி எப்படியோ நடந்துகொள்ளக்கூடியவர்கள். எவர் எந்த வேளையில் எப்படி நடந்துகொள்வார் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாத விதத்தில் செயல்புரிகிறவர்கள்.

அதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மனம் எனும் புதிர்தான். மனம் ஒரு மாயசக்தி. அது வவியதாகவும் இருக்கிறது. மனிதரை எவ்வாறெல்லாமோ ஆட்டி வைக்கிறது. உணர்ச்சிகளும் மனிதரை பாடாய்ப் படுத்துகின்றன.

விலகியிருந்து மனிதரையும் அவர்களது போக்குகளையும் -பொதுவாக வாழ்க்கையை-வேடிக்கையாகக் கவனிக்கிறவர்களுக்கு வாழ்க்கை ரசமான நாடகமாகக் காட்சி தருகிறது. மனிதர்கள் விந்தைக் கதைகளாகிறார்கள். மனம் எனும் மாயையும், விந்தையான உணர்ச்சிகளும், இவற்றினல் விதம் விதமாக பாதிக்கப்படுகிற மனிதர்களும்

iii
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/5&oldid=966428" இலிருந்து மீள்விக்கப்பட்டது