பக்கம்:அருமையான துணை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணந்த பெருமாளின் மனமகிழ்ச்சி 爱芷 குழல்வாய்மொழி குஷி மூடில் காணப்பட்டாள். அவள் இடித்து உரசி நெருக்கமாகச் சேர்ந்து போக வசதி யாக அருகே சென்றவன் அணைந்த பெருமாள் அல்ல, எவனே ஒரு உல்லாசி. சூழ்நிலை மறந்த சுந்தரி சுந்தரனுக உலாவிய அவர்களைக் கண்டு ஒகோ! இப்படியா சங்க தி!' என்று விசிலடித்துக் கொண்டது திருமலையின் மனக்குறளி. பிறகு அவனது கண்கள் விழிப்புடன் ஆராய்வதில் ஈடு பட்டன. குழல்வாய்மொழி ஒரு மாதிரி'தான்; அவள் கட்டின புருஷனை மதிப்பதே இல்லை என்கிற உண்மை அவனுக்கு வெகு விரைவிலேயே புரிந்துவிட்டது. சரிதான், அனஞ்ச பெருமாளின் மனக்கோளாறுக்கு அடிப்படைக் காரணம் இதுதான். தான் திருடி அசல் நம்பாள் என்ற தத்துவத்தை இங்கே உபயோகிக்கலாம். சூடு கண்டு நாக்கு புண்ணாகிவிட்ட பூனை எப்பவும் எங்கும் எதை யும் சந்தேகித்துக் கொண்டே திரியும் என்பதையும் பிரயோ கிக்கலாம். அவன் மனைவி மோசமானவள்; அவனுக்கு அடங்கி நடக்காதவள். அதஞல் அவன் ஊரில் உள்ள எல்லோருமே அப்படித்தான் என்று எண்ணுகிருன். அவ்வாறு உறுதியாக நம்புவதில் அவனுக்கு ஒரு திருப்தி உண்டாகிறது. தன் மனைவி ஒழுங்காக நடக்கவில்லை என்பதளுல் அவனுக்கு அவள்மீது ஏற்பட்ட வெறுப்பு. இதர பெண்கள் மீதும் பெரும் மனக் கசப்பாக வளர்ந்து கொழுந்துவிட்டது. உள்ளுற அவன் தன் மனைவியை வெறுக்கிருன். எல்லாப் பெண்களே யு மே வெறுக்கிருன். பெண் இனத்தையே கேவலமாக மதிப்பிட்டுப் பேசுவதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பழி வாங்குகிற சந்தோஷம் அவனுக்கு. அதனுல் தான் அவன் சதா இந்த ரீதியில் புலம்பித்திரிகிருன் என்று திருமலைக் கொழுந்துவின் அறிவு முடிவுகட்டியது. "பாவம், அணஞ்ச பெருமாள்!" என்று அவன் மனம் அனுதாபப்பட்டது. 'சிவாஜி ஆண்டு கலச் 1973

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/50&oldid=738734" இலிருந்து மீள்விக்கப்பட்டது