45
வுக்கு மறு பெயர் அது. ஆஸிட் என்பது எல்-எஸ்-டி. LSD) லைஸெர்ஜிக் ஆஸிட் டைதிலாமைட். இப்போ இளைஞர் உலக முற்போக்குவாதிகள், ஹிப்பிகள், மண்ணகத்தில் விண்னின்பம் பெற-விட்டு விடுதலையாகி விண்வெளியிலே பறக்கும் சுகத்தை அனுபவிக்க-இதுகளைத்தான் உபயோகிக்கிறார்கள். அதை உபயோகித்தவர்கள் மாதிரியே நம்ம பிரதரும் நடந்துகொள்கிறார். அது தான் கேட்கிறேன்" என்று உற்சாகமாகப் பேசினார்.
"நம்ம கைலாசம் அதுமாதிரிச் சரக்குகள் பக்கத்திலேயே போகமாட்டானே!" என்றான் நண்பர்களில் ஒருவனான சோமு.
இன்னொருவன் மூர்த்தி: 'அப்படியே இருந்தாலும், இங்கே எல் எஸ் டி இவனுக்கு எங்கே கிடைக்கும்?' என்று இழுத்தான்.
வாசுதேவ் துப்பாக்கி மாதிரி வெடித்துச் சிரித்தார். 'ஏன் கிடைக்காது? இதுவும் தான் பெரிய ஸிட்டி ஆக வளர்ந்துட்டுதே. நம்ம ஸிட்டியிலும் எல்லாம் கிடைக்கும். எத்தனையோ ஹிப்பிகள் வாறங்க, போறங்க. எவனையாவது புடிச்சு, டியும் டிபனும் வாங்கித் தந்தால், அது கிடைச்சிட்டுப் போகுது' என்றார்.
"நம்ம கைலாசம் அந்த மாதிரி வழிக்கெல்லாம் போகக்கூடியவன் இல்லையே' என்று சோமு சொன்னான்.
'எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குமோ? ஒரே ரக வாழ்வு அலுத்துப் போயிருக்கலாம் பிரதருக்கு! லைஃப்லே புது எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிப் பார்க்கலாமேன்னு துணிஞ்சிருக்கலாம். மனுஷங்களைப்பற்றி திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியாது. யாரு எந்த நேரத்திலே எப்படி நடந்துக்குவாங்க? எவன் இன்ன வேளையிலே என்ன செய்வான் அல்லது செய்யமாட்டான் இன்னு எதையுமே கட் அன்ட் ரைட்டா சொல்லிப்போட முடியாது..."
'ஸார் ஸார், கைலாசத்தைப் பாருங்க என்று மூர்த்தி கத்தவும், மற்றிருவரும் அங்கே கண் திருப்பினார்கள்.